நபர் ஒருவர் T 56 உடன் கைது.. வீட்டை சோதனையிட்ட போது பல வெடிபொருட்கள் சிக்கின. இரு பெண்களும் கைது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

நபர் ஒருவர் T 56 உடன் கைது.. வீட்டை சோதனையிட்ட போது பல வெடிபொருட்கள் சிக்கின. இரு பெண்களும் கைது.


சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள கிளிவெட்டி பாலம் அருகில் சேருநுவர இராணுவ முகாமில் கடமையாற்றும்
அதிகாரி ஒருவர் கொடுத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர் ஒருவர் T 56 ஆயுதத்துடன் கைதுசெய்யப்பட்டு சேருநுவர பொலிஸ் நிலையத்தில் கையளிக்கப்பட்டார்.

 இவர் 36 வயது அம்பாள் குளம் கிளிநொச்சி முகவரியை சேர்ந்த ஜோசப் பீட்டர்  ரோபின்சன் என அறியப்படுகிறது.

இவர்  வசித்துவந்த கிளிநொச்சி  வீட்டில் சோதனையிட்டபோது அந்த வீட்டில் மேலும் பல ஆயுதங்கள் வெடி பொருட்கள் சந்தேகத்துக்குரிய பொருட்கள் பலவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

 முன்னாள் எல்டிடிஇ உறுப்பினர் என அறியப்படுவது தன் வெடிபொருட்களை கண்டெடுத்து வீட்டில் வசித்து வந்த அவரின் மனைவி 23 வயது மற்றும் சகோதரி ஒருவர் 28 வயது ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு கையளிக்கப்பட்டன


இந்த மீட்பு நடவடிக்கையை விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, ரி-56 ரக துப்பாக்கி-1,
பிஸ்டல்கள் -3,
கைக்குண்டுகள் -5,
ரி-56 ரக துப்பாக்கி ரவைகள் 150,
பிஸ்டல் ரவைகள் 45,
மடிக்கணினி ஒன்று,
தொலைபேசிகள் -4,
எம்.ரி.எம்.ரி ரக துப்பாக்கி ரவைகள் 7,
டேட்டனேற்றர்கள் 45,
ஜி.பி.எஸ்-1,
டிஜிட்டல் கமெரா,
 சிறிய ரிமோட் வகைகள்,
dongal 1
பிரபாகரனின் புகைப்படம் அச்சிடப்பட்ட டீசேர்ட் 4
கருப்பு முகமூடி 1

குண்டுகளை வெடிக்க வைக்கப் பயன்படுத்தப்படும் வயர்கள்,
வெடிப்புக் கருவிகள் உட்பட இன்னும் சில உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நபர் ஒருவர் T 56 உடன் கைது.. வீட்டை சோதனையிட்ட போது பல வெடிபொருட்கள் சிக்கின. இரு பெண்களும் கைது. நபர் ஒருவர்   T 56 உடன் கைது.. வீட்டை சோதனையிட்ட போது பல வெடிபொருட்கள் சிக்கின. இரு பெண்களும் கைது. Reviewed by Madawala News on October 12, 2019 Rating: 5