சஜித் பிரேமதாச அவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமெனில், அருவக்கட்டு குப்பைத்திட்டத்தை நிறுத்த உத்தரவாதம் அளிக்க வேண்டும்; SLMC புத்தளம் மாவட்ட மத்தியக்குழு தீர்மானம். - Madawala News Number 1 Tamil website from Srilanka

சஜித் பிரேமதாச அவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமெனில், அருவக்கட்டு குப்பைத்திட்டத்தை நிறுத்த உத்தரவாதம் அளிக்க வேண்டும்; SLMC புத்தளம் மாவட்ட மத்தியக்குழு தீர்மானம்.சஜித் பிரேமதாச அவர்களுக்கு  வாக்களிக்க வேண்டுமெனில், அருவக்கட்டு 
குப்பைத்திட்டத்தை நிறுத்த உத்தரவாதம் அளிக்க வேண்டும்; SLMC புத்தளம் மாவட்ட மத்தியக்குழு தீர்மானம்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் புத்தளம் மாவட்ட மத்தியக்குழுக் கூட்டம், மாவட்ட அமைப்பாளரும், புத்தளம் நகர பிதாவுமாகிய கே.ஏ. பாயிஸ் அவர்களின் தலைமையில் கடந்த வியாழக்கிழமை (17.10.2019) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது :

எதிவரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்ற கௌரவ சஜித் பிரேமதாச அவர்களுக்கு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானித்திருக்கின்ற நிலையில் அதற்கு அமைவாக சகல மாவட்டங்களிலும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு பணிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

புத்தளம் பிரதேசத்தை பொறுத்தளவில் இப்பகுதியின் எரிகின்ற பிரச்சினையாக கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்டு புத்தளம் அருவக்காட்டில் கொட்டப்படுகின்ற குப்பைப் பிரச்சினை உருவெடுத்திருக்கிறது.

இது புத்தளம் தொகுதி முழுவதும் வாழுகின்ற சகல இன மக்களளினதும் பிரச்சினையாக உருப்பெற்றிருக்கின்ற நிலையிலேயே இந்த ஜனாதிபதி தேர்தலும் எம்மை வந்தடைந்திருக்கின்றது.

இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் யாருக்காவது ஆதரவு வழங்க வேண்டும் என்றால், அந்த வேட்பாளர் இந்த குப்பை கொட்டும் திட்டத்தை நிறுத்துவதற்கு உத்தரவாதம் தர வேண்டும் என்பது புத்தளம் மக்களின் நிலைப்பாடாக இருக்கின்றது. இது குறிப்பாக இளைஞர்களின் போராட்டமாகவும்  மாறியிருக்கின்றது.

எனவே, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் புத்தளம் மாவட்ட மத்தியக்குழு நமது கட்சி தெரிவு செய்திருக்கின்ற வேட்பாளரிடமிருந்து அறுவக்காடு  குப்பை திட்டத்தை நிறுத்துவதற்கான உத்தரவாதத்தை பெற்றுத்தரும்படி கட்சி தலைவரையும், கட்சியையும் கோருகின்றது.
சஜித் பிரேமதாச அவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமெனில், அருவக்கட்டு குப்பைத்திட்டத்தை நிறுத்த உத்தரவாதம் அளிக்க வேண்டும்; SLMC புத்தளம் மாவட்ட மத்தியக்குழு தீர்மானம். சஜித் பிரேமதாச அவர்களுக்கு  வாக்களிக்க வேண்டுமெனில், அருவக்கட்டு குப்பைத்திட்டத்தை நிறுத்த உத்தரவாதம் அளிக்க வேண்டும்; SLMC புத்தளம் மாவட்ட மத்தியக்குழு தீர்மானம். Reviewed by Madawala News on October 21, 2019 Rating: 5