ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்நாட்டில் பயங்கரவாதத்திற்கு முஸ்லிம் இளைஞர்கள் பலியாகிவிடக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு இயக்கம்.


இக்பால் அலி
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்நாட்டில் பயங்கரவாதத்திற்கு முஸ்லிம்
இளைஞர்கள் பலியாகிவிடக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு இயக்கம்.


இந்த இயக்கத்தின் மேலும்  அதன் தலைமையின்  மேலும்   ஒரு பழியை கொண்டு வந்து சுமத்துவது என்பது எதிர்த் தரப்பினருடைய வங்குரோத்து அரசியலையும் மிகப் பெரிய ஜனநாயக விரோத செயற்பாட்டையும்  காட்டுகின்றது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.



கண்டி ரோயல் ஹோட்டலில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தில் கலந் கொண்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்


என்னையும் சஹ்ரானையும் சம்மந்தப்படுத்தி பழைய ஒரு காணொளியைக் காட்சிப்படுத்தி அவருக்கும் எனக்கும் சம்மந்தம் இருப்பது போன்று ஒரு தோற்றப்பாட்டை காட்ட எத்தனித்திருப்பது என்பது விசயம் கண்டனத்தக்கு உரியதும் மிகவும் இழிவானதுமான அரசியல் நடவடிக்கை என்று நான் திட்டவட்டமாகக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.



இதன் பின்னணியென்னவென்றால் 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 40 க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஒரு பாராளுமன்ற உறுப்பினரைப் பெற்றுக் கொண்டோம். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஒரு உறுப்பினரைப் பெற்றுக் கொள்வதற்காக ஒரு வாய்ப்பு கிட்டின. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும்  மூன்று ஆசனங்கள் கிடைக்கப் பெற்றன.


இதில் காத்தான்குடியைச் சேர்ந்த இப்போது போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் தோல்வி அடைந்தார். அன்று மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்து தோல்வி அடைந்த அவர் நாங்கள் உருவாக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சரணடைந்து அவரிடத்தில் ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெற்றுக் கொண்ட தினத்தில் தம்முடைய ஆத்திரத்தை குண்டர்களை ஏவி  அடாவடித் தனத்தை கட்டவிழ்த்து  எம்முடைய கட்சிக்காரர்களைத் துன்புறுத்தி  அடாவடித் தனத்தை கட்டவிழ்த்து மிக மோசமான நடவடிக்கைகள் அங்கு அரங்கேற்றினார்கள்.



அது மாத்திரமல்ல பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தடுக்கப்பட்டார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் உடனடியாக   கட்சியின் தலைவன் என்ற வகையில் காத்தான்குடி சென்றேன். பாதிக்கப்பட்ட காட்சிக் காரர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காகவும் மேல் நடவடிக்கை மேற் கொள்வதற்காகவும் அங்கு சென்ற போது பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கப் போன இடத்திலே அங்கு  குழுமியிருந்தவர்கள் மத்தியில் அவரும் புகுந்து வந்து  காட்சிப்படுத்தப்பட்டிருக்கலாம். அது எனக்கு தெரியாத விசயம். எனக்கு அவருக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது


இந்த நிலையில்  வேண்டும் என்று இவ்வாறான  பயங்கரவாதி ஒருவரையும் பிற்பட்ட நாட்களில் பயங்கரவாதத்தில் ஈடுபட்டவரையும்  அகஸ்மாத்தாக இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்திலே இடையில் புகுந்து ஒரு சந்திப்பை ஏற்படுத்திக் கொண்ட பிற்பாடு என்னையும் சம்மந்தப்படுத்தி பயங்கரவாதத்திற்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாகக் காட்டுகின்ற விவகாரம் மிகவும் அபத்தமானது இழிவானது கண்டனதுக்கு உரியது நான் சொல்வி வைக்க விரும்புகின்றேன்.



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்நாட்டில் பயங்கரவாதத்திற்கு முஸ்லிம் இளைஞர்கள் பலியாகிவிடக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு இயக்கம் அயுதக் குழுக்கள் முஸ்லிம்கள் மீது அட்டகாசம் புரிந்த போது முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதம் தூக்கினால் தான் எங்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்று எண்ணுகின்ற ஒரு சூழலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கம் ஆயுதக் கலாசாரத்தை விட்டு இந்நாட்டில் சமாதானத்தை விரும்புகின்ற மக்களுக்கு மத்தியில் ஜனநாயக வழியின் ஊடாக எங்கள் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டிய ஒரு இயக்கம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.


ஒரு போதும் பயங்கரவாதிகளுக்குத் துணை போகாத இயக்கம். இந்தக் கும்பல் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒழிந்து நின்று கொண்டு செய்திருக்கின்ற இந்தச் செயலினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற இயக்கங்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் மிகத் தெளிவான நிலைப்பாடுகளை எடுப்பது மாத்திரமல்ல. மிகத் திட்டவட்டாக இவ்வாறான செயற்பாடுகளில் இருந்து குறிப்பாக சமய ரீதியாக பிற்போக்குத் தனமான கோட்பாடுகளை வைத்துக் கொண்டு மக்களை வன்முறையின் பால் திருப்பி விடுகின்ற கும்பல்களை தடுத்து நிறுத்துகின்ற ஒரு அரசியல் இயக்கமாக தொடர்ந்து  செயற்பட்டு வந்திருக்கின்றது.



எனவே இந்த இயக்கத்தின் மேல் அதன் தலைமையின்  மேல்  இவ்வாறான ஒரு பழியை கொண்டு வந்து சுமத்துவதற்கு எத்தனிக்கின்ற வங்குரோத்து அரசியல் தங்களுடைய சொந்த சுய இலாப அரசியலுக்காக எதிர்த்தரப்பு ஊடகங்களைப் பாவித்து செய்ய விளைவது என்பது மிகப்பெரிய ஜனநாயக விரோத ஈடுபாடு என்பதை திட்ட வட்டமாக கூறிக் கொள்ள விரும்புகின்றேன். இதை வன்மையாகக் கண்டிப்பது மாத்திரமல்ல இந்த செயல்பாட்டிலே நாங்கள் ஒரு போதும் இவ்வாறான பயங்கரவாதிகளை ஊக்குவிப்பவர்களாக நாங்கள் இருந்ததில்லை. இனியும் இருக்கப் போவதில்லை என்பதை நான் தெளிவாகக் கூறிக் கொள்கின்றேன்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்நாட்டில் பயங்கரவாதத்திற்கு முஸ்லிம் இளைஞர்கள் பலியாகிவிடக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு இயக்கம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்நாட்டில் பயங்கரவாதத்திற்கு முஸ்லிம் இளைஞர்கள் பலியாகிவிடக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு இயக்கம். Reviewed by Madawala News on October 21, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.