IMA சார்பாக 52 பேர் தேசிய கராத்தே போட்டிக்கு தெரிவு.


ஸ்ரீ லங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் கிழக்குமாகான கராத்தே போட்டி கடந்த சனி, ஞாயிறு ஆகிய
இரு தினங்கள் களுவாஞ்சிகுடி, பட்டிருப்பு மகா வித்தியாலயத்தில் கிழக்குமாகான கராத்தே சம்மேளனத்தின் தலைவர் சிஹான், முகம்மத் இக்பால் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்த போட்டியில் பதிவு செய்யப்பட்ட 25 சங்கங்களிலிருந்து கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் 500 போட்டியாளர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.

இந்த போட்டியானது Cadet (14/15 years), Junior (16/17 Years), Under 21 Years, Senior (above 21Years) Veteran ஆண்கள், பெண்கள் ஆகிய பிரிவினர்களுக்கு Kata, Kumite, Team Kata ஆகிய நிகழ்சிகள் நடைபெற்றது.

இந்த போட்டியில் கிழக்குமாகான கராத்தே சம்மேளனத்தின் தலைவர் முகம்மத் இக்பால் அவர்கள் பிரதிநிதித்துவம் செய்கின்ற International Martial arts Association (IMA) சங்கம் சார்பாகவும், தென்கிழக்கு பல்கலைக்கழகம் சார்பாகவும் கலந்துகொண்ட மாணவர்களில்

Gold – 23, Silver – 17, Bronze – 12 அடங்கலாக மொத்தமாக 52 பதக்கங்களை பெற்று தேசிய கராத்தே போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டார்கள். தேசிய போட்டியானது எதிர்வரும் டிசம்பர் மாதம் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.











IMA சார்பாக 52 பேர் தேசிய கராத்தே போட்டிக்கு தெரிவு. IMA சார்பாக 52 பேர் தேசிய கராத்தே போட்டிக்கு தெரிவு. Reviewed by Madawala News on October 21, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.