ஹிஸ்­புல்­லா­விற்கு எதி­ரா­கவே ஆட்­சே­ப­னை தெரி­வித்தேன்: ஜனாதிபதி வேட்பாளர் சீலரத்ன தேரர்



இரா­ஜ­துரை ஹஷான்

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம். எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ்  தாக்கல் செய்­துள்ள  வேட்பு மனு­விற்கு எதி­ராக ஆட்­சே­பனை மனு­வினைத் தாக்கல் செய்தேன். கடந்த கால நில­வ­ரங்­களை கருத்திற் கொண்டு நாட்டு மக்கள் ஜனா­தி­ப­தியை தெரிவுசெய்ய வேண்டும் என  ஜன­சத பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் பத்­த­ர­முல்ல சீல­ரத்ன தேரர் தெரி­வித்தார்.


தேர்தல் ஆணைக்­கு­ழுவில் நேற்று திங்­கட்­கி­ழமை வேட்­பு­மனு பத்­தி­ரத்தை சமர்ப்­பித்­ததன் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், பொது சட்­டத்­திற்கு எதி­ராக சரியா சட்­டத்தை  நடை­மு­றைப்­ப­டுத்தல், அடிப்­ப­டை­வா­தத்தை எழுச்சி பெற செய்தல்  உள்­ளிட்ட பல குற்­றச்­சாட்­டுக்கள் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ எம்.ஹிஸ்­புல்­லாவின் மீது சுமத்­தப்­பட்­டுள்­ளது.


ஜனா­தி­பதி தேர்­தலில் இவர் போட்­டி­யிட தீர்­மா­னித்து வேட்­பு­மனு தாக்கல் செய் ­துள்ளார். அம்­ம­னு­விற்கு எதி­ராக ஆட்­சே­பனை மனு­வினை சுயா­தீன முறையில் தாக்கல் செய்தேன்.  


நாட்டு மக்கள் கடந்த காலத்தில் இடம் பெற்ற சம்­ப­வங்­களை கருத்திற் கொண்டு அர­சியல் தீர்­மா­னத்தை மேற்­கொள்ள வேண்டும். தேசிய பாது­காப்­பிற்கு முக்­கி­யத்­துவம் கொடுத்தல் அவ­சியம். அதுவே எமது பிர­தான எதிர்­பார்ப்பு என்றார்.


வேட்பு மனுத்­தாக்கல் செய்­ததை தொட ர்ந்து அம்­ம­னுக்­களின் மீதான ஆட்­சே­பனை மனு சமர்ப்­பிப்­ப­தற்­கான கால­வ­காசம் வழ ங்­கப்­பட்­டது. இதன்போது இரண்டு ஆட்­சே­பனை மனுக்கள் கிடைக்கப் பெற்­றன. இவ்­விரு மனுக்­களும் தேர்தல் சட்டங்­க ளில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள விட­யங்­க­ளுடன் பொருத்தமாக காணப்படவில்லை. ஆகை யால் அந்த இரு ஆட்சேபனை மனுக்களும் நிராகரிக்கப்பட்டது என தேர்தல் ஆணை யாளர் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.

ஹிஸ்­புல்­லா­விற்கு எதி­ரா­கவே ஆட்­சே­ப­னை தெரி­வித்தேன்: ஜனாதிபதி வேட்பாளர் சீலரத்ன தேரர் ஹிஸ்­புல்­லா­விற்கு எதி­ரா­கவே ஆட்­சே­ப­னை தெரி­வித்தேன்: ஜனாதிபதி வேட்பாளர் சீலரத்ன தேரர் Reviewed by Madawala News on October 08, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.