எல்பிட்டிய தேர்தலில் தோல்வியைப் பெற்றாலும் ஜனாதிபதித் தேர்ததில் வெற்றிபெறுவதற்காக முனைப்போடு செயற்படுவோம். - Madawala News Number 1 Tamil website from Srilanka

எல்பிட்டிய தேர்தலில் தோல்வியைப் பெற்றாலும் ஜனாதிபதித் தேர்ததில் வெற்றிபெறுவதற்காக முனைப்போடு செயற்படுவோம்.


எல்பிட்டிய பிரதேசசபை எப்போதும் ஐ.தே.கவுக்குப் பாதகமான ஒன்றென அமைச்சரவை அந்தஸ்தற்ற
அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய தேர்தலில் தோல்வியைப் பெற்றாலும் ஜனாதிபதித் தேர்ததில் வெற்றிபெறுவதற்காக முனைப்போடு செயற்படவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் இதுபோல அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய வெற்றியைப் பெற்றிருந்தாலும், 2015ஆம் ஆண்டு படுதோல்வியடைந்தார் எனவும் தெரிவித்தார்.
எல்பிட்டிய தேர்தலில் தோல்வியைப் பெற்றாலும் ஜனாதிபதித் தேர்ததில் வெற்றிபெறுவதற்காக முனைப்போடு செயற்படுவோம். எல்பிட்டிய தேர்தலில் தோல்வியைப் பெற்றாலும் ஜனாதிபதித் தேர்ததில் வெற்றிபெறுவதற்காக முனைப்போடு செயற்படுவோம். Reviewed by Madawala News on October 12, 2019 Rating: 5