கல்முனை அஷ்ரப் ஞபாகாரத்த வைத்தியசாலையில் ஆரோக்கியமான உணவகம் திறப்பு



எம்.என்.எம்.அப்ராஸ்
கல்முனை அஷ்ரப் ஞபாகாரத்த வைத்திய சாலையில் தொற்றா நோய் தடுப்பு பிரிவினரால்
"தொற்றா நோய் தடுப்பு குடிசை" எனும் ஆரோக்கியமான உணவகசாலை அங்குராப்பண நிகழ்வு வைத்தியசாலை அத்தியட்சகர்.

ஏ.எல்.எப் .ரகுமான் தலைமையில்
வைத்தியசாலையின் வளாகத்தில்
இன்று (08) இடம்பெற்றது .

இதன் போது அவர் அங்கு உரையாற்றிய வைத்தியசாலைஅத்தியட்சகர் 

தொற்றா நோய் உலகில் ஒரு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது இருப்பினும் எமது பிரதேசத்தில் தொற்றா நோய் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. இதனால் இதில் அதிகமாக இளவயதினர் பாதிக்கப்படுகின்றனர்.இதற்க்கு முக்கிய காரணமாக இருப்பது எங்களுடைய வாழ்க்கை முறையாகும் இதில் முக்கிய காரணம் முறையான உடற்பயிற்ச்சி இன்மை மற்றும் உணவு பழக்க வழக்கமாகும் .


இதனை கட்டுபடுத்தும் முகமாக பொது மக்களுக்கு எமது வைத்தியசாலையில் பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.அதிலொன்றாக நாங்கள் தொற்ற நோய்களை கட்டுப்படுத்தும் உணவுகளை மக்கள் மத்தியில் கொண்டு வந்து அதனை நடைமுறைபடுத்தும் நோக்குடன் ஆரோக்கியமான உணவு தொடர்பாக மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு மேற்கொள்ளும் வகையில் ஆரோக்கியமான உணவுகள் கொண்ட உணவுசாலையை எமது வைத்தியசாலையில் நிறுவியுள்ளோம்.

இங்கே பொது மக்கள் ஆரோக்கியமான உணவுகள், தங்களது உடல் அளவிடை சுட்டி கணிப்பு மற்றும் உணவு தொடர்பான துண்டுபிரசுரங்கள் மற்றும்உடல் ஆரோக்கியம் பற்றி ஆலோசனைகள் போன்றவற்றை பெற்றுக்கொள்ள 
கூடிய வகையில் அமைத்துள்ளோம். இதனை இங்கு வருகின்ற நோயாளிகள் மாத்திரமன்றி வைத்தியசாலைக்கு வருகின்ற பொது மக்கள் அனைவரும் பயன் பெறலாம் .மேலும் இதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வை கட்டியெழுப்ப முடியும் என்றார்.

இந் நிகழ்வில் வைத்தியர்கள் ,வைத்தியசாலையின் ஊழியர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கல்முனை அஷ்ரப் ஞபாகாரத்த வைத்தியசாலையில் ஆரோக்கியமான உணவகம் திறப்பு கல்முனை அஷ்ரப் ஞபாகாரத்த வைத்தியசாலையில் ஆரோக்கியமான உணவகம் திறப்பு Reviewed by Madawala News on October 08, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.