ஜப்பானில் ஏற்பட்டுள்ள ஹெகிபிஸ் சூறாவளி காரணமாக ஸ்ரீலங்கன் விமானம் தாமதமாகும். - Madawala News Number 1 Tamil website from Srilanka

ஜப்பானில் ஏற்பட்டுள்ள ஹெகிபிஸ் சூறாவளி காரணமாக ஸ்ரீலங்கன் விமானம் தாமதமாகும்.

ஜப்பானில் ஏற்பட்டுள்ள ஹெகிபிஸ் சூறாவளி காரணமாக அங்கு
 செல்லும் வானுர்தி 7 மணி நேரம் தாமதமாகியே பயணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஸ்ரீ லங்கன் விமான  சேவை நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.


அந்த சூறாவளி இன்று பிற்பகல் ஜப்பானை கடக்கவுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதற்கமைய இன்று இரவு 7.15 அளவில் ஜப்பான் - நரீடா நோக்கி பயணிக்கவிருந்த ஸ்ரீலங்கன் வானுர்தி சேவைக்கு சொந்தமான யூ.எல். 460 ரக வானுர்தி நாளை அதிகாலை 2.15 அளவில் பயணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான விபரங்களை 0 117 77 19 79 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும் என ஸ்ரீ லங்கன் வானுர்தி சேவை தெரிவித்துள்ளது.
ஜப்பானில் ஏற்பட்டுள்ள ஹெகிபிஸ் சூறாவளி காரணமாக ஸ்ரீலங்கன் விமானம் தாமதமாகும். ஜப்பானில் ஏற்பட்டுள்ள ஹெகிபிஸ் சூறாவளி காரணமாக ஸ்ரீலங்கன் விமானம் தாமதமாகும். Reviewed by Madawala News on October 12, 2019 Rating: 5