நாட்டை குறுகிய காலத்தில் அபிவிருத்தி செய்வதற்கான அனைத்து திட்டங்களும் தயாரிக்கப்பட்டு விட்டன.நாட்டை குறுகிய காலத்தில் அபிவிருத்தி செய்வதற்கான அனைத்து
 திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.


கண்டியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.


மகேஸ் சேனாநாயக்க இன்று கண்டி அஸ்கிரிய பீடாதிபதியை சந்தித்து ஆசிப்பெற்றுக் கொண்டார்.


அதன் பின்னர் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் கட்சி அரசியல் அல்லாது நாட்டுக்கு தேவையான அரசியல் கலாசாரத்தை மாற்றவல்ல குழுவொன்று தனக்கு பின்னாள் உள்ளதாக தெரிவித்தார்.கட்சி அரசியலால் நாடு இதுவரை வறுமையின் பிடிக்குள் சிக்குண்டுள்ளதாகவும் இதுவே மக்கள் பிரிந்து பயங்கரவாதம் தோற்றம் பெற காரணமாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
அரசியல்வாதியை போல் அல்லாமல் நாட்டுக்காக சேவை செய்யும் சேவகனாகவே தாம் களத்தில் இறங்கியுள்ளதாகவும் எனவே தமது இந்த எண்ணத்தை சமூக மயப்படுத்துமாறு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


தன்னைச் சுற்றியுள்ளவர்கள் புத்திசாலித்தனமானவர்கள் எனவும் இதுவரை 30 க்கும் மேற்பட்ட சிலில் அமைப்புக்கள் தன்னுடன் இணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


மேலும் மகாநாயக்க தேர்கள், கார்டினல் மற்றும் மௌலவிமார்கள் கைச்சாத்திட்டு தமக்களித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாக சில தகுதிகள் தமக்கிருப்பதாகவும் அவர் கூறினார்.
நாட்டை குறுகிய காலத்தில் அபிவிருத்தி செய்வதற்கான அனைத்து திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் அதனை அடுத்த வாரமளவில் மக்கள் மயபடுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.தமது அணியின் அரசியல் பயணம் ஜனாதிபதி தேர்தலுடன் முடிவடையாது எனவும் அடுத்த பொதுத் தேர்தலை இலக்காக கொண்டு முன்னோக்கி செல்வதாகவும் முன்னாள் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டின் பாரிய பிரச்சினையாக காணப்படும் தேசிய பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு, சுற்றாடலை பாதுகாத்தல், சுகாதாரம் உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தி தனது கொள்கைப் பிரகடனத்தை முன்னேடுக்க தாயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


அதேபோல் நாட்டின் கல்வி துறையில் புதிய புரட்சி ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடி வருவதாகவும் தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் மகேஸ் சேனாநாயக்க மேலும் 
குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை குறுகிய காலத்தில் அபிவிருத்தி செய்வதற்கான அனைத்து திட்டங்களும் தயாரிக்கப்பட்டு விட்டன. நாட்டை குறுகிய காலத்தில் அபிவிருத்தி செய்வதற்கான அனைத்து திட்டங்களும் தயாரிக்கப்பட்டு விட்டன. Reviewed by Madawala News on October 09, 2019 Rating: 5