வாழைச்சேனை ஆயிஷாவின் சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வு... மாணவிகள் மகிழ்ச்சியில். - Madawala News Number 1 Tamil website from Srilanka

வாழைச்சேனை ஆயிஷாவின் சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வு... மாணவிகள் மகிழ்ச்சியில்.

(எச்.எம்.எம்.பர்ஸான்)
சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை ஆயிஷா 
மகளிர் மகா வித்தியாலயம் ஏற்பாடு செய்த சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வு செவ்வாய்க்கிழமை (8) பாடசாலையில் இடம்பெற்றது.
 
பாடசாலையின் பிரதி அதிபர் எம்.யூ.எம்.முகைதீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே.ரகுமான் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ஏ.ஆர்.முகைதீன்,  உப செயலாளர் சீ.எம்.எம்.பாரிஸ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
 
இதில் ஆசிரியர்களின் சிறப்பு நிகழ்ச்சிகளான நகச்சுவை அறிவுக் களஞ்சியம், வந்தால் வெட்டுவோம் சலூன் கடை நாடகம்,  பலூன் உடைத்தல் போட்டிகள் உட்பட பாடல், கவிதை, நகைச்சுவை கதை போன்றவைகள் இடம்பெற்றது.
 
பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வாழைச்சேனை ஆயிஷாவின் சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வு... மாணவிகள் மகிழ்ச்சியில். வாழைச்சேனை ஆயிஷாவின் சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வு... மாணவிகள் மகிழ்ச்சியில். Reviewed by Madawala News on October 12, 2019 Rating: 5