கோத்­தாவின் ஆட்­சியில் சிறு­பான்மையினர் நிம்­ம­தி­யாக வாழவே முடி­யாது - நஸீர் அஹமட் - Madawala News Number 1 Tamil website from Srilanka

கோத்­தாவின் ஆட்­சியில் சிறு­பான்மையினர் நிம்­ம­தி­யாக வாழவே முடி­யாது - நஸீர் அஹமட்இந்­நாட்டில் கோத்­த­பா­யவின் ஆட்சி இடம்­பெ­று­மாயின்  சிறு­பான்­மை­யினர் நிம்­ம­தி­யாக வாழ முடி­யாது என்­ப­துதான் முஸ்­லிம்­களின் ஏகோ­பித்த முடி­வாகும் என கிழக்கு மாகாண முன்னாள்  முத­ல­மைச்சர்  நஸீர் அஹமட் தெரி­வித்தார்.


ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரித்து  ஏறா­வூரில்   நடை­பெற்ற தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில் உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­றும்­போது, முஸ்­லிம்கள்  உயி­ருக்கு அஞ்சி வயற் காடு­க­ளுக்குள் மறைந்து வாழு­கின்ற ஒரு சமூ­க­மாக  இருக்க முடி­யாது. முஸ்­லிம்கள் தலை­நி­மிர்ந்து வாழ வேண்டும்.  ஜன­நா­ய­கத்­தையும்  அமை­தி­யையும் விரும்பும் பெரும்­பா­லான மக்கள் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கே வாக்­க­ளிப்­பார்கள்.


அதுதான் யதார்த்தம். தமிழ் சமூகம் எவ்­வாறு அடக்கி ஆளப்­பட்­டதோ அதை­விட மிக மோச­மான முறையில் முஸ்லிம் சமூ­கத்தை அடக்கி  ஆள­வேண்டும்  என  இன­வாதக் கூட்டம் கங்­கணம் கட்டிக் கொண்டு நிற்­கி­றது. இதைத்தான் வெலி­க­ம­, பேரு­வ­ளை­,  களுத்­து­றை­, கண்­டி, ­ திக­ன­ மற்றும் அம்­பா­றை­யில் என பல்வேறு இடங்களில் இடம் பெற்ற சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றனர். இந்த இன­வாத துரோகக் கும்­பலை எதிர்­வ­ரு­கின்ற ஜனா­தி­பதித் தேர்­த­லில் நாம் ஒரு அணி­யாக நின்று முறி­ய­டிக்க வேண்டும். நமது வாழ்வு, இருப்பு, தனித்­துவம், மனித உரிமை போன்ற அனைத்தையும் குழி­தோண்டி புதைக்­கு­ம­ள­வுக்கு அச்­சமும் பயமும் பீதியும் குடி­கொண்­ட­வர்­க­ளாக நாம் நடுங்கிக் கொண்­டி­ருந்தோம். அந்த நிலைமை தொடர்ந்தும் இந்த நாட்டில் இருக்கக் கூடாது. வெற்றி பெறக் கூடிய வேட்­பா­ளரை இன்று களத்­துக்குக் கொண்டு வந்த பெருமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு இருக்­கி­றது.


கடந்த காலங்­களில் பிரே­ம­தா­சவை, சந்­தி­ரிகாவை ஆத­ரித்து பல சாத­னைகள் புரிந்­தி­ருக்­கிறோம். அதே­வேளை சிறு­பான்­மை­யி­ன­ருக்­கெ­தி­ரான மஹிந்­த­ ரா­ஜ­ப­க்ஷவின்  அரா­ஜ­கத்தை தோற்­க­டிப்­ப­திலும் நாம் முன்­நின்றோம்.


ஆகவே, நாம் எடுத்த முடி­வுகள் ஒரு­போதும் கைசே­தப்­படக் கூடி­ய­தல்ல. எனவே, இந்த சமூகப் பணியில் நாம் அனை­வரும் தனித்­துவம், ஜன­நா­யகம், எதிர்காலம், வாழ்வு இருப்பு,  நிம்மதி எல்லாவற்றையும் கருத்திற் கொண்டு உறுதியாக சிறுபான்மையினரை அனுசரித்து ஆட்சி செய்யக் கூடிய சஜித்தை ஆதரித்து ஜனாதிபதியாக்க வேண்டும் என்றார்.

கோத்­தாவின் ஆட்­சியில் சிறு­பான்மையினர் நிம்­ம­தி­யாக வாழவே முடி­யாது - நஸீர் அஹமட் கோத்­தாவின் ஆட்­சியில் சிறு­பான்மையினர் நிம்­ம­தி­யாக வாழவே முடி­யாது - நஸீர் அஹமட் Reviewed by Madawala News on October 21, 2019 Rating: 5