மக்கள் மத்தியில் பிரச்சினைகளை ஏற்படுத்தி ரவூப் ஹக்கீம் மற்றும் சம்பந்தன் குளிர்காய முயற்சி.


-பாறுக் ஷிஹான்-
கல்முனை தமிழ்  முஸ்லிம்களை பிரித்து  மக்களுக்கு மத்தியில் பிரச்சினைகளை ஏற்படுத்த
  ரவூப் ஹக்கீம் மற்றும் சம்பந்தன் ஆகியோர் குளிர்காய முனைகின்றனர் என  முஸ்லிம் உலமாக் கட்சியின் தலைவர் முபாற‌க் அப்துல் மஜீத் மௌல‌வி தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை ஆதரித்து முஸ்லிம் உலமாக் கட்சியின் தலைவரது அலுவலகத்தில் இடம்பெற்ற   ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஞாயிற்றுக்கிழமை (20) மாலை 9  மணியளவில்  நடைபெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் மக்கள் குறிப்பாக கிழக்கு முஸ்லிம் மக்கள் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை ஆதரிக்க உள்ளனர்.

எனினும் எந்த விதமான உடன்படிக்கைகளும் இல்லாமல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு பெரும் முஸ்லீம்  கட்சிகள் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்றது.இச்செயற்பாடு இரு கட்சி தலைவர்கள் எமது மக்களை    அடிமைகளாக வைத்திருப்பது  செயற்படுவத போன்ற செயற்பாடாகவே பார்க்கின்றேன். குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலங்களிலே பெரும் ஆபத்துக்களை இந்த முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ளது. குறிப்பாக 2001ல் ஏற்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலமானலும் சரி  இன்றைய ஆட்சியானாலும் சரி முஸ்லிம் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய  சூழ்நிலையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தாங்கள் பொருப்பல்ல என்றும் அனைத்திற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவே பொறுப்புக்கூற வேண்டும் என நழுவுகின்ற ஆட்சியாகவே காணப்படுகின்றது

மேலும்  முஸ்லிம் மக்கள் சார்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.எம். ஹிஸ்புல்லாஹ்வை அமைச்சர் ரவூப் ஹக்கீம் விமர்சிப்பதென்பது சிறுபிள்ளைத் தனமானது. தேர்தலில் போட்டியிடுவதென்பது அவரவர் உரிமை  இதில் யாரும் தலையிட முடியாது  இருந்த போதிலும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் எதற்காக  முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்வை கண்டு பயப்படுகின்றார் என்று தெரியவில்லை. ஆனால் பயப்படுகின்றார் என்று நன்றாக தெரிகின்றது என்று கூறினார். தேர்தல்கள் வரும் போது தான் அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கு ஞானம் பிறக்கின்றது .பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் நான்கரை வருடம் அமைச்சராக இருந்த ரவூப் ஹக்கீம் நினைத்திருந்தால் கல்முனை பிரச்சினைக்கு ஒரு நாளில் தீர்வை பெற்றுத்தந்திருக்க முடியும்.

ஆனால் அவர் இந்த கல்முனை பிரச்சினையை பிச்சைக்காரனது புண் போன்று அதைக் காட்டியே அரசியல் செய்கின்றார். கல்முனை முஸ்லிம் மக்கள் சகோதர தமிழ் மக்களுடன் ஒன்றாக வாழ வேண்டும். தென் மாகாணத்தை பொறுத்த மட்டில் முஸ்லிம்கள் அனைவருடனும் சகோதரத்துவத்துடன் பழகும் போது ஏன் கல்முனை முஸ்லிம்களை பிரித்து பார்க்க வைக்கின்றனர் இந்த அரசியல்வாதிகள். மீண்டும் அன்னத்திற்கு வாக்களிக்க வைத்து  தமிழ் முஸ்லிம் மக்களுக்கு மத்தியில் பிரச்சினைகளை உண்டுபண்ணி  ரவூப் ஹக்கீம் மற்றும் சம்பந்தன் ஆகியோர் குளிர்காய முனைகின்றனர். மேலும் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாவது 100 க்கு 120 வீதம் அறிவுபூர்வமாக தெரிந்த உண்மை என்று தனது கருத்தில் தெரிவித்தார்.
மக்கள் மத்தியில் பிரச்சினைகளை ஏற்படுத்தி ரவூப் ஹக்கீம் மற்றும் சம்பந்தன் குளிர்காய முயற்சி. மக்கள் மத்தியில் பிரச்சினைகளை ஏற்படுத்தி ரவூப் ஹக்கீம் மற்றும் சம்பந்தன் குளிர்காய முயற்சி. Reviewed by Madawala News on October 21, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.