பெரும்பான்மையின மக்களுடன் ஒன்று சேர்ந்து, ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ அவர்களை வெற்றி பெறச் செய்வோம்.


-இக்பால் அலி-
ஐக்கிய தேசிய கட்சியின்  முதலாவது பொதுக் கூட்டத்தின் போது சஜித் பிரேமதாசவை பேட்பாளராக
களமிறக்குவதற்கு மிகவும் ஆதரவளித்த எங்கே ரவுப் ஹக்கீம் எங்கே, ரிசாட் பதியுதீன் எங்கே ? குறைந்தது சஜித் பிரேமதாச  கொண்டு வருவதற்கு தீர்மானம் எடுத்த கபிர் ஹாசீம் எங்கே. ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாடு இதுதான். 

ஆனால் அதாவுல்லா அநுராதபுரக் கூட்டத்தில் உரையாற்றினார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் தலைவர் மில்பர் கபூர் தெரிவித்தார்.


ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் ஏற்பாடட்டில் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரித்து நாவலப்பிட்டியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் தலைவர் மில்பர் கபூர் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்


கோத்தாபே ராஜபக்ஷ என்ற எங்களுக்கு பெரும் அச்சம்  இருக்கின்றது. அந்த அச்சத்தை எமது தலையில் அவர்கள் போட்டு உள்ளார்கள். மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் அதைத் தவிர வேறு எந்த சம்பவம் இடம்பெற வில்லை. தர்கா நகரில் இடம்பெற்ற சம்பவத்தின் போது நான் பேருவளை நகர சபையில் இருந்தேன்.


இந்த சம்பவம் 4.30 மணி அளவில் இடம்பெறும் போது பொலிஸுக்கு நாங்கள் கதைத்தோம். இது ஒரு சம்பவம் தான் அப்போது நடைபெற்றது. அன்று கோத்தபாய ராஜபக்ஷ இந்நாட்டில் இருக்க வில்லை. இருவரும் வெளிநாடுகளுக்குச் சென்று இருந்தார்கள். அப்போது அங்கிருந்து 6.00 மணி அளவில் 24 மணித்தியாலயத்திற்கு பூரண கட்ப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று சகல படைப்பிரினர்களுக்கு உத்தரவு விட்டுள்ளதாக அவர் என்னிடம் தொலைபேசியில் பேசினார்.


முஸ்லிம்களுக்கு தாக்குதல் நடத்த வேண்டும் என்றால் அன்று அதை 24 மணித்தியாலயத்திற்குள் தடுத்து நிறுத்த வேண்டிய அவசியமில்லை.
அன்று ஜே. ஆர். ஜயவர்தன தமிழ்  மக்களுக்கு என்ன செய்தார். நாடு முழுக்க  தாக்குதல் செய்தார்.


 மஹிந்த ராஜபக்ஷ தர்காகா நகர சம்பவத்தை   நாடு முழுக்க பத்தி எரிய வைத்திருக்கலாம். அவர்கள் 24 மணித்தியாலயத்துக்குள் பாதுகாப்பை உறுதிப்படுத்தினார்கள். 


இன்று அம்பாறை திகன, குருநாகல் உள்ளிட்ட பல இடங்களில் இந்த ஆட்சியில் தாக்குதல் மேற்கோள்ளபப்ட்டுள்ளது. இந்த நல்லாட்சி அரசாங்கம் என்ன செய்தது. தர்க்கா நகர் சம்பவத்தின் போது வெளிநாடு சென்ற மஹிந்த ராஜபக்ஷ அவர் நாடு திரும்பி வரும் போது கட்டுநாயக விமான நிலையத்தில் இருந்து நேரடியாக தர்க்கா நகருக்கு வருகை தந்தார். அங்கு விஜயம் செய்து அந்த மக்களுக்குத்தேவையான நடவடிக்கையும் நிவாரண உதவிகளையும் உடனடியாக மேற் கொண்டார்.


பேருவளை நகர சபைத் தேர்தல் இடம்பெற்ற போது அமைச்சர் ராஜித சேனாரத்ன , சஜித் பிரேமதாச, சம்பிக்க ரணவக்க, முஜிபுர்ரஹ்மான் உள்ளிட்டவர்களை கொண்டு வந்து தேர்தல் நடத்தினார். அது மட்டுமல்ல சகல வளங்களையும் கொண்டு வந்து அள்ளிக் கொட்டினார்கள். ஆனால் இந்த பேருவளை மக்கள் அனைத்து முஸ்லிம் மக்களுக்கு ஒரு முன்மாதரியான  தீர்வவை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த தாய் மண்ணைப் பாதுகாக்க துணை நின்றார்கள். அது தான் பேருவளை நகரத்திலுள்ள மக்கள் வழங்கிய பதிலாகும்.


பெரும்பான்மையின மக்களுடன் ஒன்று சேர்ந்து இந்த தாய்மண்ணைக் காப்பதற்கு நவம்பர் 16 ஆம் திகதி ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ அவர்களை வெற்றி பெறச் செய்வோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பெரும்பான்மையின மக்களுடன் ஒன்று சேர்ந்து, ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ அவர்களை வெற்றி பெறச் செய்வோம். பெரும்பான்மையின மக்களுடன் ஒன்று சேர்ந்து,  ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ அவர்களை வெற்றி பெறச் செய்வோம். Reviewed by Madawala News on October 22, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.