ஒருமித்த நாட்டினுள் பௌத்த சாசன முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்ஒருமித்த நாட்டினுள் பெளத்த சாசன முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன செயற்படவுள்ளதாக
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற மத வழிபாட்டில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்திருந்தார். 

இதன்போது, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கல்கிஸ்ஸ ஶ்ரீ தர்மபாலாராம விகாரையில் ஶ்ரீலங்கா மகா நிகாய மகா நாயக்கர்  கொட்டுகொட தம்மாவாஸவை தரிசித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார். 

இதன்போது, கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, பௌத்த சாசனத்தின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ள வேண்டிய அனைத்து செயற்பாடுகளையும் ஒருமித்த நாட்டினுள் செயற்படுத்த வேண்டும் என தெரிவித்தார். 

அதேபோல், புத்த சாசனத்தை பிரகாசமடையச் செய்ய மதக் கடமைகளை தவறாமல் நிறைவேற்றுவதாக சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்திருந்தார். 
ஒருமித்த நாட்டினுள் பௌத்த சாசன முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் ஒருமித்த நாட்டினுள் பௌத்த சாசன முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் Reviewed by Madawala News on October 09, 2019 Rating: 5