வீடியோ இணைப்பு : சஜித் பிரேமதாசவிற்கு சப்பாத்து ஒன்றை வாங்கிக் கொடுக்குமாறு அவரது மனைவியிடம் கூறினேன்.

UNF  ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு காலணி
 ஒன்றை வாங்கிக் கொடுக்குமாறு அவரது மனைவி ஜலனி பிரேமதாசவிடம் அமைச்சர் ஒருவர் கோரியுள்ளார்.


அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ஹர்ஷ டி சில்வா இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.


கொழும்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


சிங்கள பௌத்தர்களின் வாக்குகளினால் மட்டும் தேர்தலில் வெற்றியீட்ட முடியும் என சிலர் கருதுகின்றார்கள் எனவும் அது ஒருநாளும் வெற்றியளிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் இலங்கையர்களே என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இன்றைய தினம் நடைபெறும் கூட்டத்திலும் சஜித் பிரேமதாச வெள்ளை கட்டை கை சேர்ட்டும், வெள்ளை காற்சட்டையும், அதே பழைய செருப்பையும் அணிந்து வந்துள்ளார் எனவும் அவர் போலியாக தன்னை மாற்றி மக்களை ஏமாற்ற விரும்பாதவர் எனவும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
வீடியோ :
https://youtu.be/Hz5_GDk2ajQ
வீடியோ இணைப்பு : சஜித் பிரேமதாசவிற்கு சப்பாத்து ஒன்றை வாங்கிக் கொடுக்குமாறு அவரது மனைவியிடம் கூறினேன். வீடியோ இணைப்பு : சஜித் பிரேமதாசவிற்கு சப்பாத்து ஒன்றை வாங்கிக் கொடுக்குமாறு அவரது மனைவியிடம் கூறினேன். Reviewed by Madawala News on October 12, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.