வீதியொன்றில் வைத்து, பெண்ணொருவரை வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த குற்றத்தில் வைத்தியர் கைது. #இலங்கை - Madawala News Number 1 Tamil website from Srilanka

வீதியொன்றில் வைத்து, பெண்ணொருவரை வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த குற்றத்தில் வைத்தியர் கைது. #இலங்கை


ஹோமாகமை கொடகம பிரதேசத்தில் குறுக்கு வீதியொன்றில் பெண்ணொருவரை 
வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்ததாக கூறப்படும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடமையாற்றும் மருத்துவர் ஒருவரை மீகொட பொலிஸார்  கைது செய்த சம்பவம் தொடர்பில் செய்திகள் வெளியாகி உள்ளன.


சந்தேக நபரான மருத்துவரை , பெண்ணின் கணவர் தாக்கியதில் காயமடைந்துள்ளதுடன் அவர் ஹோமாகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


குறித்த பெண்ணும் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் கொடகம பிரதேசத்தில் தனியார் சிகிச்சை நிலையம் ஒன்றை நடத்தி வருபவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


சம்பவத்தை எதிர்நோக்கிய பெண், தனது மகனுடன் பாழடைந்த வீதி வழியாக வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த போது, காரில் வந்த சந்தேக நபரான மருத்துவர் வீதியில் காடான பகுதியில் வைத்து பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்துள்ளார்.


பெண் சத்தமிட்டதை அடுத்து சந்தேக நபரான மருத்துவர் தப்பிச் சென்றுள்ளார். பின்னர் நடந்த சம்பவத்தை கணவனிடம் கூறியுள்ளார்.
பெண்ணின் கணவன், மருத்துவரின் வீட்டை தேடி சென்ற போது, எதிரில் காரில் வந்த மருத்துவரை தாக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வீதியொன்றில் வைத்து, பெண்ணொருவரை வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த குற்றத்தில் வைத்தியர் கைது. #இலங்கை வீதியொன்றில் வைத்து, பெண்ணொருவரை வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த குற்றத்தில் வைத்தியர் கைது. #இலங்கை Reviewed by Madawala News on October 22, 2019 Rating: 5