திருமலை மாவட்டம் எங்கும் சஜித் பிரேமதாசா என்பதே பேச்சு ! - Madawala News Number 1 Tamil website from Srilanka

திருமலை மாவட்டம் எங்கும் சஜித் பிரேமதாசா என்பதே பேச்சு !


-கந்தளாய் ஆஸிர் -
திருகோணமலை மாவட்டத்தில்  ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா என்பதே பேச்சு , அவரை அமோக
வெற்றி பெறச் செய்வதற்கான முன்னெடுப்புக்கள் நடைபெற்று வருவதாகவும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தெளபீக் தெரிவித்தார்.

கிண்ணியாவில் உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாவட்ட காரியாலயத்தில் நேற்று முன்தினம்  (17) மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கொண்டாவாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:-  முஸ்லிம் வாக்குகள் சஜித் பிரேமதாச விற்கு வழங்கப்படாமல் வாக்குகளை அழிப்பதற்கான முன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நடவடிக்கைகளில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் முக்கியஸ்தர்களும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது கவலையளிக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தான் ஜனாதிபதியாக வர முடியாது என்று தெரிந்தும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக கூறி முஸ்லிம்களின் வாக்குகளை சிதைவடையச் முயற்சி செய்து தமது வாக்குகளை கோட்டபாய ராஜபக்ஸாவுக்கு வழங்குவதற்காக முன்வந்துள்ளனர்.

இதேபோன்று நல்லாட்சிக்கான மக்கள் முன் முன்னணி ஜேவிபி உடன் இணைந்து வாக்குகளை சிதறடிக்க செய்வதற்கான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது,

சஜித் பிரேமதாச பொருத்தவரையில் இவர் மூவின மக்களையும் மதித்து நமது அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருபவர்

இதற்கு உதாரணமாக தமது அமைச்சுக்கு வழங்கப்பட்ட வீடமைப்பு திட்டத்தில் திருகோணமலை மாவட்டத்தின் மூவின மக்களுக்கும் வீட்டுத்திட்ட நடவடிக்கைகளை துரிதமாகச் ஏற்படுத்தியிருக்கிறார்.

இவ்வாறான ஒரு தலைவர்தான் எமது நாட்டுக்கு தேவையாகும் ஆகவே நாம் அவரை வெற்றி பெறச் செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்

இதேவேளை எதிரணியில் போட்டியிடுகின்ற கோட்டபாய ராஜபக்ஸ அவர்களை பொறுத்தவரையில் அவர் அவர்களுடைய காலத்தில் தமது சொந்த உறுதிப்பத்திரம் உள்ள காணிக்குள் கூட சொந்தமாக வீடுகள் கட்ட முடியாத ஒரு சூழ்நிலை  ஏற்பட்டது இவர்கள் பல்வேறு இராணுவ அதிகாரிகளை நியமித்து மக்களுக்கு பல்வேறு அசௌகரியங்களை  ஏற்படுத்தினர்

அதுமட்டுமல்லாமல் அண்மையில் கிறீஸ் பூதம் என்ற ஒரு மாயை ஏற்படுத்திய மக்களுக்கு பல்வேறு அசௌகரியங்களை ஏற்படுத்தியிருந்தார் என்பதையும்  இங்கு சுட்டிக் காட்டக் கூடியதாக இருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தவ்பீக் தெரிவித்தார்.

திருமலை மாவட்டம் எங்கும் சஜித் பிரேமதாசா என்பதே பேச்சு ! திருமலை மாவட்டம் எங்கும் சஜித் பிரேமதாசா என்பதே பேச்சு ! Reviewed by Madawala News on October 21, 2019 Rating: 5