கம்பளை பகுதியில் காணாமல் போன ஆசிரியை 7 நாட்களின் பின் விக்டோரியா வில் சடலமாக மீட்கப்பட்ட சோகம்.


கம்பளை பகுதியில் கடந்த முதலாம் திகதி காணாமல் போன ஆசிரியையின்
 சடலம் 7 நாட்களின் பின்னர்  விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.


கடற்படையினர் சூழியோடிகள் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போதே நேற்று முன்தினம் இரவு இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


கம்பளை பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஆசிரியை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 சடலம் ஆசிரியையின் பெற்றோரினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்திமா நிசன்சலா என அறியப்படும் இந்த ஆங்கில ஆசிரியை பாடசாலை விட்டு வீடு வரும் மாலை வேளை கடும் மழை பெய்து கொண்டிருந்து, பாரிய தண்ணீர்  பாதைகளில் ஓடியுள்ளது.

நீரில் கால்வாய் ஒன்றில் விழுந்து அடித்து செல்லப்பட்டு சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் மகாவலி கங்கையில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது.


சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கம்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை தலாத்துஓய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


கம்பளை பகுதியில் காணாமல் போன ஆசிரியை 7 நாட்களின் பின் விக்டோரியா வில் சடலமாக மீட்கப்பட்ட சோகம். கம்பளை பகுதியில் காணாமல் போன ஆசிரியை 7 நாட்களின் பின் விக்டோரியா வில் சடலமாக மீட்கப்பட்ட சோகம். Reviewed by Madawala News on October 09, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.