பெரியமுல்லை சுற்றிவளைப்பில் வீடொன்றில் 2180 சிகரெட் பெட்டிகள் (43600 சிகரெட்டுக்கள் ) மீட்பு


   கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து,  நீர்கொழும்பு பெரியமுல்லை பகுதியில்
நேற்று முன்தினம் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், 2180 சிகரெட் பெட்டிகளைக் கைப்பற்றியுள்ளனர்.


   மேற்குக் கடற்படையின் அதிகார வரம்புக்குட்பட்ட நீர்கொழும்பு பெரியமுல்லையில் கடற்படையினரும், பொலிஸாரும் இணைந்து நேற்று முன்தினம்  சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.


   இதன்போது, 2180 சிகரெட் பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றில் 43600 சிகரெட்டுக்கள் இருந்துள்ளன. வீடொன்றில் இவ்வாறு சிகரெட் பெட்டிகள் மறைத்துவைக்கப்பட்டுள்ளதாகக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்தே, இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இச்சம்பவத்துடன் தொடர்புடைய நீர்கொழும்பைச் சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )
பெரியமுல்லை சுற்றிவளைப்பில் வீடொன்றில் 2180 சிகரெட் பெட்டிகள் (43600 சிகரெட்டுக்கள் ) மீட்பு பெரியமுல்லை  சுற்றிவளைப்பில் வீடொன்றில்  2180 சிகரெட் பெட்டிகள் (43600 சிகரெட்டுக்கள் )  மீட்பு Reviewed by Madawala News on October 21, 2019 Rating: 5