கம்பஹா மாவட்டத்தில் பல விபச்சார விடுதிகள் முற்றுகை.. வயது 20 க்கும் 50 க்கும் இடைப்பட்ட பல பெண்கள் கைது.

  கம்பஹா மாவட்டத்திற்குள் மிகவும் சூட்சுமமான முறையில் ஆயுர்வேத
 மருந்தகம் என்ற போலிப் பெயரில் இயங்கி வந்த, சட்ட விரோத விடுதிகள் பலவற்றை மேல் மாகாண  வடக்கு குற்றத்தடுப்புப்  பிரிவுப் பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.


   சீதுவ, நீர்கொழும்பு, கொச்சிக்கடை,  பியகம போன்ற பிரதேசங்களில் இவ்வாறான போலி ஆயுர்வேத நிலையங்கள் மிக நீண்ட காலமாக  இயங்கி வந்துள்ளதாகவும், இது தொடர்பில் தற்போது தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க தெரிவித்துள்ளார்.


   கட்டான, களுத்துறை, சிலாபம், கேகாலை, உக்குவளை, கம்பளை,  கொடகவெல, பொல்பித்திகம, ஹபரண, பிபில, ஹங்குரங்கெத்த, பல்லம, எல்லக்கல, கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த வயது 20 க்கும் 50 க்கும் இடைப்பட்ட யுவதிகளும் பெண்களுமே இவ்வாறான சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருப்பது தெரிய வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


   இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்களில் போலியாக நடத்தப்பட்டு வந்த இந்த விடுதிகளின் முகாமையாளர்களும் அடங்குகின்றனர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 
  
( ஐ. ஏ. காதிர் கான் )
கம்பஹா மாவட்டத்தில் பல விபச்சார விடுதிகள் முற்றுகை.. வயது 20 க்கும் 50 க்கும் இடைப்பட்ட பல பெண்கள் கைது. கம்பஹா மாவட்டத்தில் பல விபச்சார விடுதிகள் முற்றுகை.. வயது 20 க்கும் 50 க்கும் இடைப்பட்ட பல பெண்கள் கைது. Reviewed by Madawala News on October 08, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.