ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் வெற்றிக்கொள்வோம், அப்படியே நாடாளுமன்ற தேர்தலில் 113க்கு அதிக உறுப்பினர்களால் வெல்வோம்.

அரசாங்கம், நிறைவேற்று, அமைச்சரவையின் தலை​வர் மற்றும் 
கட்டளைத்தளபதி, எதிர்காலத்திலும் ஜனாதிபதியே ஆவாரெனத் தெரிவித்துள்ள அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, பொதுத் தேர்தலில் 113 உறுப்பினர்களுக்கு மேல் வெற்றிக்கொள்வதற்கு, ஜனாதிபதித் தேர்தலை வென்றெடுக்கவேண்டும் என்றார்.


ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவைத்திரட்டும் வகையில், அநுராதபுரத்தில், வர்த்தகர்களுடனான சந்திப்பு, நேற்று (17) இடம்பெற்றது. 



அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நவம்பர் 16ஆம் திகதி நடத்தப்படும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டுவருக்கு எவ்விதமான அதிகாரங்களும் இல்லை. 


பெயரலவிலேயே ஜனாதிபதியாக அவர் இருப்பார். அந்த ஜனாதிபதியினால் எவ்விதமான பிரயோசமும் இல்லையென்பது பொய்யாகும்” என்றார்.



ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் எதிர்காலங்களிலும் செல்லுப்படியாகும். ஆனால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டவராகவும் நிலையான ஆட்சியை கொண்டவராகவும் அவர் இருக்கவேண்டுமெனத் தெரிவித்த அமைச்சர் சம்பிக்க, கடந்த நான்கரை வருடங்களில் முகம்கொடுத்த பாரிய பிரச்சினைதான், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமையாகும்.
அதனால், சுதந்திரக் கட்சி, சில சந்தர்ப்பங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஒன்றிணைந்த எதிரணி ஆகியவற்றின் ஒத்துழைப்பை​ பெற்றுக்கொள்ளவேண்டிய நிலைமை ஏற்பட்டது என்றார்.


இந்தத் தேர்தலில் நிச்சயம் வெற்றிக்கொள்வோம், 2015ஆம் ஆண்டு பிரச்சினை மீளவும் எங்களுக்கு ஏற்படாது. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியுடன் 113 உறுப்பினர்கள் மேலே, நாடாளுமன்ற ஆசனங்களை கைப்பற்றுவோம் என்றார்.
ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் வெற்றிக்கொள்வோம், அப்படியே நாடாளுமன்ற தேர்தலில் 113க்கு அதிக உறுப்பினர்களால் வெல்வோம். ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் வெற்றிக்கொள்வோம், அப்படியே நாடாளுமன்ற தேர்தலில் 113க்கு அதிக உறுப்பினர்களால் வெல்வோம். Reviewed by Madawala News on October 18, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.