ரணிலுக்கு கடும் விசனத்தை ஏற்படுத்திய ரூபவாஹினி... இன்றைய சந்திப்பில் சஜித்துக்கு நெருக்கடியான நிபந்தனை.


ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று 
தீர்மானிப்பதற்காக அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க – அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பு நடைபெறவுள்ளது.


இதன்போது – நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது குறித்து பேசப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க இணங்கும் பட்சத்தில் ஜனாதிபதி வேட்பாளர் பதவியை வழங்கலாம் என்ற புதிய நிபந்தனையை அமைச்சர் சஜித்திடம் ரணில் முன்வைக்கவுள்ளாரென அறியமுடிந்தது.


ஏற்கனவே சஜித்துக்கு ஆதரவளித்துவரும் கட்சிகளின் தலைவர்மார் பலர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு ஆதரவளித்து வரும் நிலையில் ரணிலின் இந்த புதிய நிபந்தனை சஜித்தை அரசியல் ரீதியில் நெருக்கடிக்குள்ளாக்கும் என சொல்லப்படுகிறது.

இதேவேளை, 
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் நேற்று பாதுகாப்பமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட விவகாரம் பிரதமர் ரணிலுக்கு கடும் விசனத்தை ஏற்படுத்தியிருப்பதாக தகவல்.


நேற்று இரவு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலருடன் பேசிய ரணில் இந்த நடவடிக்கையின் பின்னணியில் சஜித் இருப்பதாக தமக்கு தகவல் கிடைத்ததாகவும் , இதனால் சஜித்துடன் இணங்க வேண்டிய பல விடயங்களை மீள்பரிசீலனை செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


இதனால் இன்று மாலை நடைபெறவுள்ள ரணில் -சஜித் சந்திப்பில் பெரிதளவு முன்னேற்றம் ஏற்படாதென ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்ட தகவல்கள் தெரிவித்தன.

By: சிவ ராமசாமி
தமிழன lk

ரணிலுக்கு கடும் விசனத்தை ஏற்படுத்திய ரூபவாஹினி... இன்றைய சந்திப்பில் சஜித்துக்கு நெருக்கடியான நிபந்தனை.  ரணிலுக்கு கடும் விசனத்தை ஏற்படுத்திய ரூபவாஹினி... இன்றைய சந்திப்பில் சஜித்துக்கு நெருக்கடியான நிபந்தனை. Reviewed by Madawala News on September 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.