ரணில் தரப்பு , சஜித் தரப்புக்கு புதிய பொறி... வெற்றி அளிக்குமா இந்த ரணில் வியூகம்? - Madawala News Number 1 Tamil website from Srilanka

ரணில் தரப்பு , சஜித் தரப்புக்கு புதிய பொறி... வெற்றி அளிக்குமா இந்த ரணில் வியூகம்?


ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்க ஐக்கிய தேசியக் 
கட்சி தடுமாறி வரும் நிலையில் கட்சியின் நிறைவேற்றுக் குழுவை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூட்ட அதன் தலைவரும் பிரதமருமான ரணில் தீர்மானித்துள்ளார்.


அதற்கு முன்னர் நிறைவேற்றுக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை அவர் நியமிப்பாரென தெரிகிறது.அந்த புதிய நியமனங்களை வழங்கும் அதிகாரம் அவருக்கு இருப்பதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன .இதேவேளை ஜனாதிபதி வேட்பாளர்களாக ரணில் ,கரு ஜயசூரிய,சஜித் ,தயா கமகே ஆகியோரின் பெயர்கள் முன்வைக்கப்படலாமெனவும் அப்படியான நிலைமை வந்தால் ரணிலுக்கே கூடுதலான ஆதரவு வருமென தெரிகிறது.கட்சித் தலைவரின் இந்த மறைமுக செயற்பாடுகளால் அதிருப்திக்குள்ளாகியுள்ள சஜித் தரப்பு தனிவழி செல்ல பேச்சு நடத்துகிறது.சஜித்திற்காக பிரத்தியேக பிரசார அலுவலகம் ஒன்றை கொம்பனித்தெருவில் திறக்க ஏற்பாடாகியுள்ளது.முன்னாள் எம் பிகளான திஸ்ஸ அத்தநாயக்க ,இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோர் இதற்கான ஒருங்கிணைப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.


இதற்கிடையில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது குறித்து விசேட தீர்மானமொன்றையும் நிறைவேற்றுக்குழுவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க ,ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுவையும் நிறைவேற்றுக் குழுவையும் ஒரே நேரத்தில் கூட்ட நடவடிக்கை எடுக்குமாறு சஜித் தரப்பு ரணிலிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சிவா ராமசாமி
அரசியல் ஆய்வு கட்டுரையாளர்
ரணில் தரப்பு , சஜித் தரப்புக்கு புதிய பொறி... வெற்றி அளிக்குமா இந்த ரணில் வியூகம்? ரணில் தரப்பு , சஜித் தரப்புக்கு புதிய பொறி... வெற்றி அளிக்குமா இந்த ரணில் வியூகம்? Reviewed by Madawala News on September 21, 2019 Rating: 5