சாதாரண முஸ்லிம் மக்கள் தொடர்பில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற நிலைப்பாடு மாற்றப்பட வேண்டும்.


சமாதானத்தை விரும்பும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள தீவிரவாதிகள் என்ற குற்றச்சாட்டில்
இருந்து அவர்களை விடுவிக்க கூடிய இயலுமை பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கே உள்ளதாக பெபிலியான சுனேத்ராதேவி பிரிவெனாவின் விஹாராதிபதி பேராசிரியர் மேதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று (09) சுனேத்ராதேவி பிரிவெனாவிற்கு சென்று ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.

இதன்போதே விஹாராதிபதி பேராசிரியர் மேதகொட அபயதிஸ்ஸ தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் ஆசி வழங்கிய தேரர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்ததன் மூலம் நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்மை செய்தாக கூறினார்.

கடந்த காலத்தில் தமிழ் மக்களை தவறாக பார்த்தாகவும், அவர்கள் எல்.ரீ.ரீ.ஈ யினரிடம் இருந்து மீட்கப்பட்டதாகவும் தேரர் சுட்டிக்காட்டினார்.

அதேபோல் இன்று முஸ்லீம் மக்கள் வேறு ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதாகவும் கூறினார்.

ஆகவே 2005 ல் இருந்த நிலைமைக்கு நாடு மீண்டும் வந்துள்ளது எனவும் எனவே சாதாரண முஸ்லிம் மக்கள் தொடர்பில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற நிலைப்பாடு மாற்றப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சாதாரண முஸ்லிம் மக்கள் தொடர்பில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற நிலைப்பாடு மாற்றப்பட வேண்டும். சாதாரண முஸ்லிம் மக்கள் தொடர்பில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற நிலைப்பாடு மாற்றப்பட வேண்டும். Reviewed by Madawala News on September 10, 2019 Rating: 5