ஐ.தே கட்சியின் வேட்பாளர் யார் ? சந்திரிக்காவின் நிலையை எண்ணி அச்சப்படும் ரணில். கட்சியா ? தனது எதிர்காலமா ?

முகம்மத் இக்பால் (சாய்ந்தமருது)
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவுசெய்வதில் மும்முனை 
போட்டி நிகழ்வதுடன், வேட்பாளரை தெரிவு செய்வதற்கான குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.   

கடந்த ஐம்பத்திரெண்டு நாட்கள் அரசியல் இழுபறியின்போது ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை நிறுத்துவதாக ரணிலினால் வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது. அதனை தனக்கு சாதகமாக வைத்துக்கொண்டு தானே வேட்பாளர் என்று சஜித் களத்தில் இறங்கியதுதான் இந்த இழுபறிக்கு காரணமாகும்.

தலைமைத்துவத்தினதும், கட்சியினதும் கட்டுப்பாட்டினை மீறி இவ்வாறு சுயபிரகடனம் செய்துகொண்டு தலைமைக்கு அச்சுறுத்தல் விடுக்கின்ற சஜித்தின் செயல்பாட்டுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கமுடியாத நிலையில் ரணில் உள்ளார்.

அரசியலில் இருந்து ஓய்வு பெற்று செல்லவேண்டிய சூல்நிலையில்லாமல் அரசியல் ஆரோக்கியத்துடன் இருக்கின்ற நிலையில், சஜித்துக்கு வேட்பாளர் வழங்கப்பட்டு, தேர்தலில் அவர் வெற்றிபெற்றால் தனது அரசியல் எதிர்காலம் என்ன என்பதுதான் ரணிலின் கவலையாகும்.

ஜனாதிபதி பதவியில் இருப்பவருக்கே கட்சியின் தலைவர் பதவி வழங்கப்படல் வேண்டும் என்று ஐ.தே கட்சியின் யாப்பு கூறுகின்றது. இதனை திருத்தம் செய்தபின்பு சஜித்துக்கு வேட்பாளர் வழங்கப்பட்டால், வெற்றி பெற்றதன் பின்பு இப்போது தன்னுடன் இருக்கின்றவர்கள் அனைவரும் அதிகாரத்துக்கு பின்னால் செல்லமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது ?

ஜனாதிபதி என்ற அதிகாரம் சஜித்துக்கு சென்றபின்பு தான் செல்லாக்காசாக ஆக்கப்பட்டு தனது கட்சி செயற்குழு உறுப்பினர்கள் எனக்கு எதிராக விரல் நீட்டி தன்னை ஓரம்கட்ட மாட்டார்கள் என்று கூறமுடியாது.  

மட்டுமல்லாது தனக்கு அதிகாரம் உள்ள பிரதமர் பதவியை சஜித் வழங்குவார் என்பதற்கும் என்ன உத்தரவாதம் உள்ளது ? போன்ற கேள்விகள் ரணிலின் மனதில் எழாமலில்லை.

இன்றுள்ள சூழ்நிலையில் ஐ.தே கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியிலும், செயற்குழு உறுப்பினர்கள் மத்தியிலும் சஜிதுக்கே செல்வாக்கு அதிகமாக காணப்படுகின்றது. இந்த நிலையில் சஜிதுக்கு வேற்பாளர் மறுக்கப்பட்டால் வரயிருக்கின்ற எதிர்ப்பினை எவ்வாறு சமாளிப்பது என்ற நிலையில் ரணில் தடமாறுவதனை காண்கின்றோம்.  

2005 இல் தனது சகோதரர் அநுராவையும் புறக்கணித்துவிட்டு சந்திரிக்காவினால் ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த ராஜபக்ச நிறுத்தப்பட்டார். அத்துடன் மகிந்தவின் வெற்றிக்காக இரவு பகலாக ஓய்வில்லாமல் பிரச்சாரப்பணியில் ஜனாதிபதி சந்திரிக்கா ஈடுபட்டார்.

அந்த தேர்தலில் மஹிந்த வெற்றிபெற்றதும், சந்திரிக்காவின் விசுவாசிகள் அனைவரும் மஹிந்தவின் விசுவாசியானார்கள். அதன் பின்பு சந்திரிக்கா செல்லாக்காசு ஆனார்.

 மட்டுமல்லாது முன்னாள் ஜனாதிபதிக்கான பல சலுகைகளும் சந்திரிக்காவுக்கு மறுக்கப்பட்டது. இவ்வாறான நிலைமை தனக்கும் ஏற்பட்டுவிடும் என்று ரணில் சிந்திப்பதில் தவறில்லை.  

கட்சியா அல்லது தனது அரசியல் எதிர்காலமா என்ற நிலையில், தனது அரசியல் வாழ்வை இழந்து கட்சியை வளர்தெடுப்பதற்காக சஜிதுக்கு வேட்பாளர் வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பது தவறானது.

தனக்கு வேட்பாளர் வழங்கப்படாவிட்டால் சுதந்திர கட்சியுடன் சேர்ந்து பொது வேட்பாளராக சஜித் களம் இறங்கினால் அது அவரது அரசியல் தற்கொலைக்கு சமமாகும். ஐ.தே கட்சியின் தலைவர் பதவிக்கான நீண்டகால கனவு இத்துடன் கலைந்துவிடும் என்பது சஜிதுக்கு தெரியாமலில்லை.

இதற்கிடையில் ஜனாதிபதியின் அதிகாரத்தை ஒழிப்பதுதான் தனது இலக்கு என்று கரு ஜெயசூர்யா அறிக்கை விடுவதனை பார்க்கின்றபோது இது ரணிலின் ஓர் அரசியல் நகர்வாகவே பார்க்கப்படுகின்றது.  

எது எப்படியிருப்பினும் வேட்பாளரை தெரிவு செய்கின்ற குழு நீதியாக நடந்துகொள்ளுமா ? அந்த குழுவின் சிபாரிசு தனக்கு பாதகமாக இருந்தாலும் கட்சி தலைவர் ரணில் அதனை ஏற்பாரா ? அல்லது சஜிதுக்கு வேட்பாளர் வழங்கப்பட்டு தேர்தலில் தோற்கடிக்கப்படுவாரா ? பொறுத்திருந்து பார்ப்போம்.

முகம்மத் இக்பால் 
சாய்ந்தமருது 
ஐ.தே கட்சியின் வேட்பாளர் யார் ? சந்திரிக்காவின் நிலையை எண்ணி அச்சப்படும் ரணில். கட்சியா ? தனது எதிர்காலமா ?  ஐ.தே கட்சியின் வேட்பாளர் யார் ? சந்திரிக்காவின் நிலையை எண்ணி அச்சப்படும் ரணில். கட்சியா ? தனது எதிர்காலமா ? Reviewed by Madawala News on September 21, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.