மட்டக்களப்பு இளைஞர்களுக்கு ஜப்பானில் தொழில்வாய்ப்பு..


இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களது ஏற்பாட்டில் 
தயார்படுத்தல் நடவடிக்கை சனிக்கிழமை ஏறாவூரில்...

இலங்கை அரசுக்கும் ஜப்பான் அரசுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக 
தேசிய தொழிற்தகைமையை பூர்த்தி செய்த (ஆகக் குறைந்தது NVQ-3) 10,000இளைஞர்களை ஜப்பான் நாட்டிற்கு தொழில் வாய்ப்பிற்காக அனுப்பி வைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து  ஜப்பான் செல்வதற்கு தகுதியானவர்களை அடையாளம் காணும் பொருட்டு தகவல் திரட்டு நடவடிக்கையும் , தயார்படுத்தலுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கும் எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களது ஏற்பாட்டில் ஏறாவூரில் முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பயிற்சிக்கான பணிப்பாளர் நாயகம் திரு. ரன்தெனிய வின் வழிகாட்டலுடன் இடம்பெற உள்ள குறித்த  வேலைத்திட்டத்திற்கு ஜப்பான் நாட்டிற்காக தொழில் வாய்ப்பிற்கு செல்வதற்கு ஆர்வமும் தகைமையும் உள்ள இளைஞர்கள் இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்தை தொடர்பு கொள்வதுடன் , எதிர்வரும் சனிக்கிழமை ஏறாவூரில் இடம்பெற உள்ள தகவல் திரட்டு மற்றும்  விழிப்பூட்டல் கருத்தரங்கிலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலதிக விபரங்கள் தேவைப்படின் ,நேரடியாக  ஏறாவூர் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களது அலுவலகத்தை
தொடர்பு கொள்ளவும்.

#இராஜாங்க அமைச்சரின் ஊடகப்பிரிவு.
மட்டக்களப்பு இளைஞர்களுக்கு ஜப்பானில் தொழில்வாய்ப்பு..  மட்டக்களப்பு இளைஞர்களுக்கு ஜப்பானில் தொழில்வாய்ப்பு.. Reviewed by Madawala News on September 23, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.