இலங்கைக்கான ஹஜ் கோட்டாவை அதிகரிக்க, சவூதி மஜ்லிஸ் சூரா கவுன்சில் தலைவர் நடவடிக்கை.



(எம்.ஆர்.எம்.வஸீம்)
இலங்கை முஸ்லிகளுக்கான ஹஜ் கோட்டாவை அதிகரிக்க நடவடிக்கை 
எடுப்பதாக சவூதி மஜ்லிஸ் சூரா கவுன்சில் தலைவர் அஷ்ஷேக் கலாநிதி அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் இப்ராஹீம் தெரிவித்தார்.


சபாநாயகர் கரு ஜயசூரியவின் அழைப்பையேற்று மூன்று நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சவூதி அரேபிய மஜ்லிஸ் சூரா கவுன்சிலின் தலைவர் மற்றும் தூதுக்குழுவினர் சபாநாயகர் கருஜயசூரியவை நேற்று பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.


இதன்போது இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பெளசி, இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த ஹஜ் கோட்டா தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக சிறிது காலத்துக்கு குறைக்கப்பட்டிருந்தது.


என்றாலும் தற்போது வழங்கப்பட்டு வரும் கோட்டா எமக்கு போதுமானதாக இல்லாமல் இருக்கின்றது. அதனை அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.


அத்துடன் சவூது அரேபிய ராஜ்ஜியத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றிவரும் சுமார் 2இலட்சம் இலங்கையர்கள் அந்நாட்டில் எதிர்கொண்டுவரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் இதன்போது சவூதி மஜ்லிஸ் சூரா சபை தலைவரிடம் எடுத்துரைக்கப்பட்டது
இலங்கைக்கான ஹஜ் கோட்டாவை அதிகரிக்க, சவூதி மஜ்லிஸ் சூரா கவுன்சில் தலைவர் நடவடிக்கை. இலங்கைக்கான ஹஜ் கோட்டாவை அதிகரிக்க, சவூதி மஜ்லிஸ் சூரா கவுன்சில் தலைவர்   நடவடிக்கை. Reviewed by Madawala News on September 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.