ஜனாதிபதி தேர்தல் - தேர்தல் ஆணைக்குழுவுக்கு நாளை முதல் அதிகாரம் - Madawala News Number 1 Tamil website from Srilanka

ஜனாதிபதி தேர்தல் - தேர்தல் ஆணைக்குழுவுக்கு நாளை முதல் அதிகாரம்ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக சட்ட ரீதியிலான அதிகாரம் நாளை தொடக்கம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு
கிடைப்பதாக அணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல் செயலக அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜனாதிபதி தேர்தல் சட்டம் மற்றும் அரசியலமைப்பு என்பனவற்றுக்கு அமைய ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அதிகாரம் நாளை முதல் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைப்பதாக தெரிவித்த அவர் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளும் தினம் ஒக்டோபர் 15ஆம் திகதி முடிவடைகிறது.அன்றைய தினம் முதல் 63 நாட்களுக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது அவசியமாகும் என்றும் கூறினார்.


ஆணைக்குழுவின் தேவைக்கு அமைய அது தொடர்பான தினம் அறிவிக்கப்படும் அரசியல்வாதிகள் அல்லது சோதிடர்களுக்கு தேவையான தினம் இதில் கவனத்தில் கொள்ளப்படமாட்டாது என்றும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார். 

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்தாக 15 பேர் எழுத்துமூலம் அறிவித்துள்ளனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவோரின் எண்ணிக்கை 20 வரை அதிகரிக்கலாம். ஜனாதிபதி தேர்தலுக்காக கடந்தாண்டு வாக்காளர் இடாப்பு பயன்படுத்தப்படவுள்ளது. என்றும் அவர் கூறினார.

அடுத்த வருடம் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலுக்காக இவ்வருடத் தேர்தல் இடாப்பு பயன்படுத்தப்படவுள்ளது. இந்த பட்டியல் தற்சமயம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பெயர் பட்டியலில் தமது பெயர் இடம்பெறாவிட்டால் அது பற்றி எதிர்வரும் 19ம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க முடியும் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் - தேர்தல் ஆணைக்குழுவுக்கு நாளை முதல் அதிகாரம் ஜனாதிபதி தேர்தல் - தேர்தல் ஆணைக்குழுவுக்கு நாளை முதல் அதிகாரம் Reviewed by Madawala News on September 09, 2019 Rating: 5