சம்பள உயர்வு கோரி தென்கிழக்கு பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் அடையாள பணிப் பகிஸ்கரிப்பு.


-பாறுக் ஷிஹான்-
சம்பள உயர்வு கோரி தென்கிழக்கு பல்கலைக்கழக கல்வி சாரா
ஊழியர்கள்
அடையாள பணிப்பகிஸ்கரிப்பு ஒன்றினை  செவ்வாய்க்கிழமை (10)மேற்கொண்டனர்.

இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் அனைத்து தொழிற்சங்கங்கள் ஏற்கனவே தீர்மானத்தின் பிரகாரம் உயர் கல்வி அமைச்சிற்க்கும் அரசாங்கத்திற்கும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம்.

அவை நிறைவேற்றப்படாமல் தொடர்ச்சியாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது தொடர்ந்து தங்களது ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று ஒரு நாள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பை பல்கலைக்கழகங்களின் ஊழியர்கள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்க  உறுப்பினர்கள்  கருத்து தெரிவிக்கையில்.

கடந்த வருடம் தொடர்ந்து  பணிப் பகிஷ்கரிப்பை எமது  சங்கங்கள்
மேற்கொண்டிருந்த போதும் எந்தவித முன்னேற்றமும் இல்லை இந்த வருடம் இதன் தொடர்ச்சியாக இன்று ஒருநாள் பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத்தலைவர் காமில் தனது கருத்தில்
நாடாவியரீதியில் இடம்பெற்று வரும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பில் எமது தென்கிழக்கு பல்கலை கழகமும் இணைந்து இன்றுமுதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.

எமது கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செவிசாய்த்து தீர்த்த தரும் வரை எமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம் என்பதை தெரிவித்து கொள்கின்றோம்.

சம்பள அதிகரிப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஜூலை 30 ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை மேற்கொண்டிருந்தோம். சம்பந்தப்பட்ட தரப்பினர் எங்களுக்கு சாதகமான பதில் தராததினால் கடந்த ஓகஸ்ட்28,29திகதிகளில் இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொண்டிருந்தோம்.  இவற்றை செவிமடுக்காத அரசாங்கம் கூடிய விரைவில் தீர்த்து தீரும்வரை போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்திருப்பதாக தெரிவித்தார்.
சம்பள உயர்வு கோரி தென்கிழக்கு பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் அடையாள பணிப் பகிஸ்கரிப்பு. சம்பள உயர்வு கோரி தென்கிழக்கு பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் அடையாள பணிப் பகிஸ்கரிப்பு. Reviewed by Madawala News on September 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.