(படங்கள் ) கந்துருவல முஸ்லிம் கொலனி பள்ளிவாயலில் முஸ்லிம்களை சந்தித்த கோட்டபாய ராஜபக்ஷ.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் கந்துருவல
  முஸ்லிம் காலனி பிரதேசத்தில் அமைந்துள்ள பச்சபள்ளியில் இடம்பெற்ற மார்க்க நிகழ்வில் கலந்து கொண்டார்


இதன்போது கருத்து தெரிவித்த பள்ளிவாயல் தலைவர் அல்ஹாஜ் பஷீர் அஹ்மத் அவர்கள்,

 பள்ளிவாசலில் இடம்பெற்ற மார்க்க நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ அவர்களுக்கு நன்றி  தெரிவிக்கிறோம்.

இன்றைய தினம் முஸ்லிம் மக்களுக்கு ஒரு முக்கியமான நாள்.
 எமது முஸ்லிம் மக்கள் ஒருபோதும் தவறான வழியில் செல்பவர்கள் அல்ல பள்ளிவாசல்களில் மார்க்க மார்க்க நிகழ்வுகள் மட்டுமே இடம்பெறும்.


 ஜம்மியத்துல் உலமா கொழும்பு மாவட்ட தலைவர் உட்பட எவரும் அரசியல் தொடர்பான விடயங்களில் யாரையும் பலவந்தப் படுத்துவதில்லை.

 நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் எதிர்பார்ப்பது கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் என்பதே.

 எமது மக்களுக்கும் பாதுகாப்பு அவசியம்.
 கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட அநியாயங்கள் அனைவரும் அறிந்ததே. நாங்கள் யாரும் இந்த நாட்டுக்கு எதிரானவர்கள் அல்ல இந்த நாட்டை நாசமாக்க வேண்டிய அவசியமும் எமக்கு இல்லை எமது தாய்மார் எப்பொழுதும் எமக்கு பிழையானது செய்வதற்கு சொல்லித்தந்து இல்லை.


 நாம் இந்த நாட்டில் சிறுபான்மையினராக இருந்தாலும் எமது நோக்கம் இந்த நாட்டை அபிவிருத்தி செய்வது தான். மேலும் சிங்கள,  தமிழ் மக்களுடன் ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக வாழ்வதே எமது குறிக்கோள் .

சஹ்ரான்  போன்றவர்களால் அனைத்து முஸ்லிம்களையும் தீவிரவாத கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். தீவிரவாதிகள் மிக  மிகச்சிறிய அளவில் தான் இருந்தார்கள் ஆனால் ஊடகங்கள் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாக சித்தரிக்கின்றது .


அனைத்து முஸ்லிம்களும் தீவிரவாதி இல்லை என்பதை  நீங்கள் ஜனாதிபதியாக ஆன பின்பு இந்த  நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள். உங்களிடம்  எமது  எதிர்பார்ப்பு அதுதான் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொலன்நறுவை அமைப்பாளர் ரொசான் ரணசிங்க MP அவர்களும் ஏராளமான பிரதேச முஸ்லிம் மக்களும் கலந்து கொண்டனர்.

Chaminda Karunarathne
journalist







(படங்கள் ) கந்துருவல முஸ்லிம் கொலனி பள்ளிவாயலில் முஸ்லிம்களை சந்தித்த கோட்டபாய ராஜபக்ஷ. (படங்கள் ) கந்துருவல  முஸ்லிம் கொலனி பள்ளிவாயலில் முஸ்லிம்களை சந்தித்த கோட்டபாய ராஜபக்ஷ. Reviewed by Madawala News on September 19, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.