உறங்கிக் கொண்டிருந்த ணவனின் கழுத்தை வெட்டிக் கொன்ற மனைவி . #மனைவி


குருணாகலில் உறங்கிக் கொண்டிருந்த தனது கணவனின் கழுத்தை வெட்டிக் கொலை செய்துவிட்டு,
மனைவி ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய உயிரிழந்தவரின் மனைவியான சனத் குமாரி (38) என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.


சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் இரத்த வெள்ளத்தில் கிடந்த கணவனின் சடலத்தை மீட்டுள்ளனர்.


உயிரிழந்தவர், போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும், கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட கடும் மோதலை அடுத்து கணவன் உறங்க சென்றுள்ளார். உறங்கிக் கொண்டிருந்த கணவனை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார்.


உடனடியாக 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தான் கொலை செய்து விட்டதாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
10 வருடங்கள் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்ந்தவர்களுக்கு பிள்ளைகள் இல்லை என கூறப்படுகின்றது.


இந்நிலையில் கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உறங்கிக் கொண்டிருந்த ணவனின் கழுத்தை வெட்டிக் கொன்ற மனைவி . #மனைவி  உறங்கிக் கொண்டிருந்த ணவனின் கழுத்தை வெட்டிக் கொன்ற மனைவி . #மனைவி Reviewed by Madawala News on September 05, 2019 Rating: 5