சிறிய பிக்குகள் மீது தாக்குதல் நடத்தியது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்கவும்.


சிறிய பிக்குகள் இருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை
முன்னெடுக்குமாறு  அஸ்கிரிய மகாநாயக்க தேரரான வரகாகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர் , பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொலிஸ் மா அதிபருக்கு இன்று (12) அனுப்பியுள்ள கடிதமொன்றில் அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

சிறிய பிக்குகள் இருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை அடுத்து, ஹொரவபொத்தானை பொலிஸாரால் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு நேற்று (11) கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இதன்போது, சந்தேக நபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதவிய நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
சிறிய பிக்குகள் மீது தாக்குதல் நடத்தியது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்கவும். சிறிய பிக்குகள்  மீது தாக்குதல் நடத்தியது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்கவும். Reviewed by Madawala News on September 13, 2019 Rating: 5