எனது ஆட்சியில் புத்தர் சிலைகளை சேதப்படுத்தவோ பள்ளிவாயல்களை சேதப்படுத்தவோம் இடமில்லை ; சஜித் வாக்குறுதி



எனது ஆட்சியில் மத ஸ்தானங்களை சேதப்படுத்த எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை
என ஐக்கிய தேசிய கட்சி பிரதித்தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனை குறிப்பிட்டார்.

சிலர் அலுத்கமை பேருவளை  பகுதியில் இஸ்லாம் மதஸ்தானங்களை  சேதப்படுத்தினார்கள். சிலர் மாவனல்லை பகுதியில் புத்த சிலைகளை சேதப்படுத்தினார்கள்.நாம் இனவதாத்தை முற்றாக புறக்கணிக்க வேண்டும்.நாம் அதனை  வெளிப்படையாக எதிர்க்க வேண்டும்.அதை தொடர்பில் கதைக்க முதுகெழும்பு இருக்க வேண்டும்.

எந்த சந்தர்ப்பத்திலும் இந்த நாட்டில் புத்த சிலைகளை சேதல்படுத்த இடமளிக்க மாட்டேன்.இஸ்லாமிய மத ஸ்தானங்களை சேதப்படுத்த நான் ஒரு போதும் இடமளிக்க மாட்டேன். அவற்றுக்கு எதிராக கடும் தண்டனை வழங்க வேண்டும்.கேவில் மற்றும் கத்தோலிக மத ஸ்தானங்களை சேதப்படுத்த இடமளிக்க கூடாது.அவற்றுக்கு எதிராக கடும் தண்டனை வழங்க வேண்டும்.

இன்று சிலர் கடந்த காலத்தில் நிகழ்ந்த விடயங்களை மறந்துவிட்டர்கள்.இன்று சிலர் அலுத்கமை பேருவளை பகுதிகளில் மத ஸ்தாங்களை சேதப்படுத்தியவர்களை வணங்கி விழுகிறார்கள்.அலுத்கமை சூத்திரதாரிகளுக்கு இன்று சிலர் மாலை அணிவிக்கிறார்கள். இனவதாத்திற்கு எமது நாட்டில் எந்த இடமும் இல்லை.தீவிரவாதத்திற்கும் எமது நாட்டில் இடமில்லை. இனவாதம் மற்றும் தீவிரவாத்தினை நாம் முற்றாக ஒழிக்க வேண்டும்.

என்னிடம் இந்த நாட்டின் ஆட்சி பொறுப்பை தந்தால் இனவாதம் மற்றும் தீவிரவாதத்த்திற்க்கு முற்றுப்புள்ளி வைப்பேன். என்னிடம் இனவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு இடமில்லை .எனது ஆட்சியில் புத்தர் சிலையையோ, பள்ளிவாசல்களையோ சேதப்படுத்த முடியாது.கோவில் மற்றும் தேவாலங்களை தாக்க முடியாது.இனவாத செயற்பாடுகளுக்கு இடமில்லை. அவற்றுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பேன்.என அவர் குறிப்பிட்டார். 
எனது ஆட்சியில் புத்தர் சிலைகளை சேதப்படுத்தவோ பள்ளிவாயல்களை சேதப்படுத்தவோம் இடமில்லை ; சஜித் வாக்குறுதி எனது ஆட்சியில் புத்தர் சிலைகளை சேதப்படுத்தவோ பள்ளிவாயல்களை சேதப்படுத்தவோம் இடமில்லை ; சஜித் வாக்குறுதி Reviewed by Madawala News on September 22, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.