வீடியோ: பெண் ஒருவரை கொன்று இலைகளால் மூடி, அட்டகாசம் செய்த யானைகள்.


அனுராதபுரம் - பேமடுவ, உலுக்குளம் பிரதேசத்தில் இன்று (05) அதிகாலை 1.45 மணி அளவில் காட்டு
யானை தாக்குதலுக்கு உள்ளாகி மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உலுக்குளம் பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய பெண்ணின் வீட்டிற்கு இன்று அதிகாலை இரண்டு காட்டு யானைகள் வந்துள்ளன.

இந்நிலையில், வீட்டின் முன்பக்கத்தில் குறித்த பெண் வௌியே வந்துள்ள போது யானை ஒன்று நிற்பதை கண்டுள்ளார்.

அதனை தொடர்ந்து வீட்டின் பின்புறமாக அவரது மகனின் வீட்டிற்கு செல்ல முற்பட்ட போது பின்பக்க கதவிற்கு அருகில் இருந்த யானை ஒன்று அவரை தாக்கியுள்ளது.

கணவர் அவரை காப்பாற்ற முயற்சித்த போதும் அது பயன் அளிக்கவில்லை.

யானை குறித்த பெண்ணை தாக்கி கொலை செய்த பின்னர், தேக்கு மரத்தின் இலைகளை கொண்டு சடலத்தை மூடியுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

பின்னர், சுமார் 20 நிமிடங்கள் அவ்விடத்திற்கு எவரையும் அண்மிக்க யானை விடவில்லை எனவும், பிரதேசவாசிகள் பட்டாசு வெடித்து யானையை விரட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னர், விலச்சிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இப்பிரதேசத்தில் காட்டு யானை காரணமாக அதிக பாதிப்புக்கள் ஏற்படுவதாகவும், இதற்கு விரைவான தீர்வினை பெற்றுக் கொடுக்குமாறும் பிரதேசவாசிகள் கோரியுள்ளனர்.

மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகள் விலச்சிய பொலிஸாரால் மேற்கொள்ளப்படுகின்றன.
இச்செய்தி தொடர்பில் பதிவான கள  வீடியோ : https://youtu.be/4bNp3qWyd3s
வீடியோ: பெண் ஒருவரை கொன்று இலைகளால் மூடி, அட்டகாசம் செய்த யானைகள். வீடியோ: பெண் ஒருவரை கொன்று இலைகளால் மூடி, அட்டகாசம் செய்த யானைகள். Reviewed by Madawala News on September 05, 2019 Rating: 5