சுகாதார தொண்டர் ஒருவர் மண்ணெண்ணெய்யை ஊற்றி தற்கொலை முயற்சி.


வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் 454 பேருக்கு இன்று காலை நியமனக்கடிதங்கள் வழங்கும்
நிகழ்வு சாவகச்சேரி நகராட்சி மன்ற பொன்விழா மண்டபத்தில் இடம்பெறவிருந்தது. 

இந்நிலையில் ஏற்கனவே சுகாதார தொண்டர்களாக தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்த சுமார் 800 வரையான சுகாதார தொண்டர்கள் நியமனம் வழங்கவிருந்த மண்டபத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சுகாதாரத் தொண்டர்களை பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை நேரில் சென்று சந்தித்துள்ளார்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட  ஒருவர் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்ட முயற்சித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

மேலும் சாவகச்சேரி நகராட்சி மன்றத்தை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், நியமனம் பெறவுள்ள சுகாதாரத் தொண்டர்கள் மாற்று வழியில் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த போராட்டக்காரர்களும் உள்ளேசெல்ல முற்பட்டமையால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.
சுகாதார தொண்டர் ஒருவர் மண்ணெண்ணெய்யை ஊற்றி தற்கொலை முயற்சி. சுகாதார தொண்டர் ஒருவர் மண்ணெண்ணெய்யை  ஊற்றி தற்கொலை முயற்சி. Reviewed by Madawala News on September 05, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.