மகா பௌத்­தர்கள் என கூறிக்­கொண்­டு இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக இருந்தவர் தூபி­யை­யேனும் அமைத்­துள்­ளார்­களா?


(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
மகா பெளத்தர் என சொல்­லிக்­கொண்­டி­ருப்­பவர் இரண்டு தட­வைகள் நிறை­வேற்று ஜனா­தி­ப­தி­யாக இருந்தும்
ஒரு தூபி­யை­யேனும் அமைக்­க­வில்லை. ஆனால் பயங்­க­ர­வாத தாக்­கு­த­லுக்கு பின்னர் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­களின் ஆத­ர­வுடன் தாக்­கப்­பட்ட பள்­ளி­வா­சல்­களை புன­ர­மைக்­கவும் நாங்கள் நிதி ஒதுக்­கீடு செய்தோம் என அமைச்சர் சஜித் பிரே­ம­தாச தெரி­வித்தார்.

அத்­துடன்  எனக்­கெ­தி­ராக எந்­த­ளவு சேறு பூசி­னாலும் அபி­வி­ருத்தி பணி­களை தொடர்வேன் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று எதிர்க்­கட்­சி­யினால் கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருந்த மத்­திய கலா­சார நிதியம் தொடர்­பான சபை ஒத்­தி­வைப்பு வேளை மீதான பிரே­ர­ணையில் பதி­ல­ளித்து உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

பௌத்த சாச­னத்தை பாது­காப்­பது அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் அர­சாங்­கத்தின் கட­மை­யாகும். அதே­போன்று மற்­றைய மதங்­களின் உரி­மை­களும் பாது­காக்­கப்­பட வேண்டும் என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதன் பிர­கா­ரமே சிசு அறநெறி செவன என்ற வேலைத்­திட்­டத்தை ஆரம்­பித்­துள்ளோம். 30 இலட்சம் ரூபாவை ஒரு அறநெறி பாட­சா­லைக்­காக ஒதுக்­கி­யுள்ளோம்.

இதன்­படி இலங்­கையில் 361 தஹம் பாட­சா­லைகள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. இ­வற்­றுக்கு செல­வ­ழித்­தது தவறா என கேட்­கின்றேன். இது சிறைத்தண்­டனை வழங்­கு­ம­ள­வான குற்­றமா? என கேட்­கின்றேன்.

பயங்­க­ர­வாத தாக்­கு­த­லுக்­குள்­ளான ஆல­யங்­களை நிர்­மா­ணிக்க இந்த நிதி­யத்தில் இருந்தே செல­வ­ழித்தோம். அதேபோல் தாக்­கு­த­லுக்கு பின்னர் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­களின் ஆத­ர­வுடன் முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டன.

அந்த பள்­ளி­வா­சல்­களை புன­ர­மைக்­கவும் நாங்கள் நிதி ஒதுக்­கீடு செய்தோம். எதிர்க்­கட்சி கொண்­டு­வந்­தி­ருக்கும் இந்த ஒத்­தி­வைப்பு வேளை மீதான பிரே­ர­ணையால் 10க்கும் அதிக மக்கள் சேவை தடைப்­பட்­டி­ருக்­கின்­றது. எதிர்க்­கட்சி உறுப்­பினர் டீ.பி. ஏக்­க­நா­யக்க யாரு­டை­யதோ இத்­துப்­போன கயிற்றை பிடித்­துக்­கொண்டு இந்த பிரே­ர­ணையை கொண்­டு­வந்­தி­ருக்­கின்றார்.



 நான் அதி­காலை 4 மணிக்கு எழுந்து நள்­ளி­ரவு 12 மணிக்கே  நித்­தி­ரைக்கு செல்­கின்றேன். நான் மக்­க­ளுக்­காக வேலை செய்­வ­தற்­கா­கவே இவ்­வாறு எழு­கின்றேன். இவ்­வா­றான நிலை­மையில் ஏன் என் மீது குற்­றச்­சாட்­டு­களை முன்­வைக்­கின்­றீர்கள் என கேட்­கின்றேன். நான் மற்­றை­ய­வரின் பணி­க­ளுக்கு எனது பிறப்புச் சான்றை கொடுக்கும் வொயிஸ் கட் பௌத்தன் அல்ல.

எனது பௌத்த தன்மை பூமி­யிலும் விகா­ரை­க­ளிலும் இருக்­கின்­றது.  நீங்கள் வேண்­டி­ய­ள­வுக்கு என் மீது குற்­றச்­சாட்­டு­களை முன்­வை­யுங்கள். வேண்­டு­மென்றால் என்னை வெலிக்­க­டைக்கும் அனுப்­புங்கள். எனக்கு பிரச்­சி­னை­யில்லை. ஆனால் இந்த வரு­டத்­திற்குள் 1000 அறநெறிப் பாட­சாலை மண்­ட­பங்­களை அமைக்க வேண்­டு­மென்­பதே எனது இலக்­காகும்.

விகா­ரைக்கு சென்று வொய்ஸ்கட் கொடுக்கும் மகா பௌத்­தர்கள் என கூறிக்­கொண்­டி­ருந்­த­வர்கள் ஒரு தூபி­யை­யேனும் அமைத்­துள்­ளார்­களா? இரண்டு தடவைகள் நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்தும் இதனைச் செய்தார்களா என கேட்கின்றேன். ஆனால் நான் அதனை செய்துள்ளேன். எனவே என் மீது எவ்வகையான குற்றச் சாட்டுக்களை, விமர்சனங்களை முன்வைத் தாலும் நான் எனது கடமையை செய்வேன். விகாரைகள் அமைப்பது தவறு என்றால் என்னை வெலிக்கடைக்கு அனுப்பினாலும் பிச்சினையில்லை என்றார்.
மகா பௌத்­தர்கள் என கூறிக்­கொண்­டு இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக இருந்தவர் தூபி­யை­யேனும் அமைத்­துள்­ளார்­களா? மகா பௌத்­தர்கள் என கூறிக்­கொண்­டு இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக இருந்தவர் தூபி­யை­யேனும் அமைத்­துள்­ளார்­களா? Reviewed by Madawala News on September 05, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.