கட்சிகளைக் கலைத்துவிட்டு ஐ.தே.கட்சியில் இணைந்துவிடுங்கள்..!



கட்சிகளைக் கலைத்துவிட்டு ஐ.தே.கட்சியில் இணைந்துவிடுங்கள்..!

அதுதான் முஸ்லிம் சமூகத்துக்கு செய்யும் பெரிய உதவியாகவும் இருக்கும்..!

தனித்துவம் காப்போம் என்று புறப்பட்ட கட்சிதான் மு.காங்கிரஸ் என்ற கட்சி, இன்று அந்தக் கட்சி பலகூறுகளாக உடைந்திருந்தாலும், தலைவர் அஷ்ரப்பின் போட்டோவை வைத்து அரசியல்லாபம் தேடுவதில் மட்டும் அவர்கள் ஒரே கெள்கையைத்தான் பின்பற்றுகின்றார்கள் அதேநேரம் மக்களை விற்று பணம்,பதவியை பெற்றுக்கொள்வதிலும் ஒற்றுமையாகத்தான் செயல்படுகின்றார்கள் அதனை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.

இவர்கள் தங்களது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள ஆளுக்கொரு கட்சியை வைத்துக்கொண்டாலும், அதன் மூலம்தங்களுடைய வங்கிக் கணக்குகளை உயர்த்திக்கொண்டார்களே தவிர இவர்களை நம்பி வாக்களித்த மக்களின் பிரச்சினைகளில் ஒன்றையேனும் தீர்த்து வைத்தார்களா என்றால் அப்படியொன்றும் இதுவரை நடக்கவில்லை என்றே கூறவேண்டும். இந்த நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டுவந்ததே முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத்தான் என்று கூறியவர்கள். இந்த அரசாங்கத்தில் நடந்த அத்தனை சதிகளையும் கண்டும் காணாதவர்கள் போலவே இருந்துவிட்டார்கள். 

இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எது எப்படியிருந்தாலும் ஐ.தே.கட்யோடு பயணித்த முஸ்லிம் கட்சிகள் இரண்டும். தொடர்ந்தும் அவர்களோடுதான் பயணிக்கவேண்டும் என்ற கடமைப்பாடு கிடையாது. ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டால் கூட்டாக பயணித்த கட்சியைவிட்டு வெளியேவந்து, சுதந்திரமான முறையில் எல்லா வேட்பாளர்களோடும் பேச்சுவார்த்தை நடத்தி எந்த வேட்பாளர் நமது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்கின்றார்களோ அவர்களை ஆதரிப்பதுதான் நியாயமானதும் சுந்திரமானமான செயல்பாடாகும் என்பதே உண்மையாகும்.

ஆனால் இந்தத் தேர்தலை பொறுத்தவரை நமது இருகட்சி தலைவர்களும் நினைக்கின்றார்கள்.  எது எப்படிப்போனாலும் பரவாயில்லை ஐ.தே.கட்சிக்குள்தான் நாங்கள் இருப்போம் என்ற பாணியில் செயல்பட்டு வருகின்றார்கள். இந்தச் செயல்பாடுகளின் பின்னால் இவர்களின் இயலாமைகள்தான் உள்ளது என்பதை மக்கள் மத்தியிலே மறைத்துவிட்டு, நாங்கள் சமூகத்துக்காகத்தான் இப்படிச் செய்கின்றோம் என்று காட்ட முனைகின்றார்கள் என்பதை பார்க்கின்றபோது சிரிப்பதா அழுவதா என்று புரியாமல் உள்ளது.

ஐ.தே.கட்சிக்குள் வசமாக மாட்டிக்கொண்ட இந்த இரு கட்சி தலைவர்களும் தலையிடிக்கு தலையணையை மாற்றுவதுபோன்று ஐ.த.கட்சிக்குள்ளயே மாற்றுத் தலைவனை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருவதனைக் காணக்கூடியதாக உள்ளது. அந்த தலைவன் சஜீதாகவும் இருக்கவேண்டும் என்று விரும்பும் இந்தத் தலைமைகள். அவரது நோக்கம் என்ன? அவரது அரசியல் கொள்கை என்ன? அவர் கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகம் சார்ந்த விடயங்களில் எப்படி நடந்து கொண்டார்?  என்ற கேள்விகளுக்கு விடைதேடுவதை விட்டுவிட்டு, அவருடைய கடந்தகால திருகுதாளங்களை  மூடி மறைத்துவிட்டு, அவரோடு எந்தவித புரிந்துணர்வு பேச்சுவார்த்தைளையோ அல்லது ஒப்பந்தங்களையோ செய்ய முற்படாமல் வெறுமனே அவர் பின்னால் செல்ல நாங்கள் தயார் என்று கூறி நிற்பதானது இவர்களின் அரசியல் வங்குரோத்து தண்மையையே எடுத்துக் காட்டுகின்றது. அதேநேரம் சஜீத் என்பவர் மிகத்தெளிவாகவே கூறிவிட்டார் (நிபந்தனை விதிக்கும் எந்தக் கட்சிகளுடனும்  நான் உடன்பட மாட்டேன் என்று)  இப்படி கூறியதன் பின்பும் ரோசமில்லாமல் இவரைத்தான் நாங்கள் ஆதரிப்போம் என்று கூறுவதில் ஏதோவொரு மர்மம் அதற்குள் உள்ளது என்றே என்னவேண்டியுள்ளது. 

ஆகவே ஐ.தே.கட்சி எதுசெய்தாலும் பரவாயில்லை அவர்களுடனேய செத்துமடிவோம் என்று செயல்படும் இந்த இரண்டு தலைமைகளும், இனிமேலாவது தனித்துவமான கட்சிகள் நாங்கள் என்றுகூறி மக்களை பேய்க்காட்டாமல், பேசாமல் தங்களது கட்சிகளை கலைத்துவிட்டு ஐ.தே.கட்சியுடன் சங்கமமாகிவிட்டால் நல்லது என்றே கூறவருகின்றோம், இதன் மூலம்  பல பிரச்சினைகளுக்கு தீர்வை காணாதுவிட்டாலும், சில பிரச்சினைகளுக்காவது தீர்வை பெறக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம்  இருக்கின்றன என்பதே உண்மையாகும். 
இதனைக்கருத்தில் கொண்டு மக்களை இன்னும் மடையர்களாக ஆக்காமல் இனிமேலாவது ஐ.தே கட்சியுடன் இணைந்து செயலாற்றுவதே உங்களுக்கு சிறந்த தெரிவாக இருக்கும் என்பதே எங்களின் கருத்தாகும்.

எம்எச்எம்.இப்றாஹிம்
கல்முனை..
கட்சிகளைக் கலைத்துவிட்டு ஐ.தே.கட்சியில் இணைந்துவிடுங்கள்..! கட்சிகளைக் கலைத்துவிட்டு ஐ.தே.கட்சியில் இணைந்துவிடுங்கள்..! Reviewed by Madawala News on September 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.