அமைச்சர் ரவுப் ஹக்கீமின் கருத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.


அமைச்சர் ரவுப் ஹக்கீமின் கருத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று,
நாடாளுமன்ற உறுப்பினர் அசூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவது தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்த ஹக்கீம், இந்த நடவடிக்கையின் பின்னணியில் பிரதமர் ரணில் செயற்பட்டிருப்பதாக கண்டுபிடித்திருப்பதாகவும், இது தோல்வியின் விளிம்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக கருதுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள ஆஷூ மாரசிங்க அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை ரவுப் ஹக்கீம் நிறைவேற்ற தவறி விட்டதாக கூறினார்.அமைச்சர் ஹக்கீம் தெரிவித்த கருத்து தொடர்பில் அவசரமாக விசாரணை ஒன்றை செய்ய வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க கோரிக்கை முன்வைத்துள்ளார்.


அமைச்சர் ரவுப் ஹக்கீமின் கருத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். அமைச்சர் ரவுப் ஹக்கீமின் கருத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். Reviewed by Madawala News on September 20, 2019 Rating: 5