கஞ்சிபான இம்ரானின் தந்தை மற்றும் சகோதரர் ஒருவர் உள்ளிட்ட 6 பேர் விளக்கமறியலில்சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிபான இம்ரானின்
தந்தை மற்றும் சகோதரர் ஒருவர் உள்ளிட்ட 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இன்று குறித்த நபர்கள் ரத்கம பொலிஸாரினால் காலி நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

குறித்த நபர்கள் பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கஞ்சிபானி இம்ரானை பார்க்க நேற்று (12) மாலை வந்த சந்தர்ப்பத்தில் அவர்களிடம் இருந்த சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்றை சோதனையிட்டதில் அதில் இருந்து இரண்டு கைப்பேசிகள் மற்றும் இரண்டு சார்ஜர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. 

அதனபடிப்படையில் ரத்கம பொலிஸாரால் கஞ்சிபான இம்ரானின் தந்தை மற்றும் சகோதரர் ஒருவர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 

பொலிஸ் அதிகாரி ஒருவரை தொலைப்பேசி ஊடாக அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் பிரபல போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிபான இம்ரான் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார். 

அவரை இம்மாதம் 20 ஆம் திகதி வரை சிறைச்சாலையில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன கடந்த தினம் உத்தரவிட்டார்.
கஞ்சிபான இம்ரானின் தந்தை மற்றும் சகோதரர் ஒருவர் உள்ளிட்ட 6 பேர் விளக்கமறியலில் கஞ்சிபான இம்ரானின் தந்தை மற்றும் சகோதரர் ஒருவர் உள்ளிட்ட 6 பேர் விளக்கமறியலில் Reviewed by Madawala News on September 13, 2019 Rating: 5