இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 45 பேர் இஸ்லாத்தை தழுவி தாக்குதலுக்கு தயாராவதாகக் கூறப்படுவது பொய்!’

(ரெ.கிறிஷ்ணகாந்)
இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து
இலங்கை  இராணுவத்தைச் சேர்ந்த 45 பேர் இஸ்லாம் மதத்தை தழுவி உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதலை ஒத்ததான தாக்குதலுக்கு தயாராகி வருவதாகக் கூறப்படும் விடயத்தை முற்றாக மறுப்பதாகவும், இது தொடர்பில் இராணுவ மட்டத்தில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர், பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.


தம்புள்ளையில் கடந்த 16 ஆம் திகதியன்று ஊடக சந்திப்பொன்றை நடத்திய, மக்கள் சேவை அமைப்பு என்ற அமைப்பின் தலைவர் எனக் கூறப்படும் ரிஷாம் மரூஷ் என்ற நபர், கொமாண்டோ படையணியைச் சேர்ந்த அசங்க பிரியந்த என்பவரின் அறிவுறுத்தலுக்கமைய, பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 45 பேர் இஸ்லாம் மதத்தைத் தழுவி தாக்குதல் ஒன்றை நடத்த தயாராவதாக கூறியிருந்தார்.



இது தொடர்பில் இராணுவ ஊடகப் பேச்சாளரிடம் மெட்ரோ நியூஸ் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 


அதன்போது, அவர் மேலும் கூறுகையில், குறித்த நபர் தெரிவித்துள்ளதாக கூறப்படும் விடயங்கள் எவ்வித அடிப்படையுமற்றது எனவும், தன்னை பிரபல்யப்படுத்துவதற்காக இவ்வாறாக கூறப்படும் தகவல்களால் பொதுமக்கள் குழப்பமடையத் தேவையில்லை என்றார்.


அத்துடன், இந்த ஊடக சந்திப்பை நடத்திய நபர் தொடர்பிலும், அவரால் கூறப்பட்ட கொமாண்டோ படையணியைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுபவர் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்கவு ள்ளதாகவும் விரைவில் குறித்த நபர்களை அழைத்து வாக்குமூலம் பெறவுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.



இதேவேளை, சந்தேகநபர் எனக்கூறப்படும் இராணுவத்தின் உறுப்பினர் பேஸ்புக் மூலமாக தகவல்களை பரிமாறியுள்ளதாக ரிஷாம் மரூஸ் தெரிவித்திருந்தார். அத்துடன் அவருடன் ஸ்கைப்பில் உரையாடியதாக புகைப்பட ஸ்க்ரீன் ஷொட் ஒன்றையும் மரூஸ் காண்பித்திருந்தார்.



இந்நிலையில், பேஸ்புக் மூலமாக தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளதா என்பது குறித்தும் மேற்படி வெளிப்படுத்தல் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார்.
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 45 பேர் இஸ்லாத்தை தழுவி தாக்குதலுக்கு தயாராவதாகக் கூறப்படுவது பொய்!’ இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 45 பேர் இஸ்லாத்தை தழுவி தாக்குதலுக்கு தயாராவதாகக் கூறப்படுவது பொய்!’ Reviewed by Madawala News on September 19, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.