(15 அங்குல ) மெக்புக் ப்ரோ மடிக்கணினியை எடுத்துச் செல்ல ஶ்ரீலங்கன் விமான சேவை தடை விதித்தது.அப்பிள் 15 அங்குல மெக்புக் ப்ரோ மடிக்கணினியை எடுத்துச் செல்ல 
ஶ்ரீலங்கன் விமான சேவை தடை விதித்துள்ளது.


அப்பிள் நிறுவனத்தினால் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தயாரிக்கப்பட்ட 15 அங்குல மெக்புக் ப்ரோ மடிக்கணினியின் மின்கலத்தில் தீப்பற்றும் அபாயம் காணப்படுவதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ பற்றும் அபாயம் தொடர்பில் அப்பிள் நிறுவனத்தினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை குறிப்பிட்டுள்ளது.


2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் குறித்த மடிக்கணினிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தம்மிடம் காணப்படும் குறித்த ரக மடிக்கணினியின் மின்னலம் பாதுகாப்பானதா என்பது தொடர்பில் அப்பிள் நிறுவனத்தின் ஊடாக உறுதி செய்து கொள்ளுமாறு தமது பயணிகளுக்கு ஶ்ரீலங்கன் விமான சேவை அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, தீப்பற்றும் அபாயம் காணப்படும் மின்கலம் மாற்றப்பட்டுள்ளதை விமான நிலையத்தில் வைத்து உறுதி செய்ய வேண்டும் எனவும் ஶ்ரீலங்கன் விமான சேவை நிபந்தனை விதித்துள்ளது.


அதனை உறுதிசெய்ய முடியாதவிடத்து குறித்த மடிக்கணினியை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(15 அங்குல ) மெக்புக் ப்ரோ மடிக்கணினியை எடுத்துச் செல்ல ஶ்ரீலங்கன் விமான சேவை தடை விதித்தது. (15 அங்குல ) மெக்புக் ப்ரோ மடிக்கணினியை எடுத்துச் செல்ல ஶ்ரீலங்கன் விமான சேவை தடை விதித்தது. Reviewed by Madawala News on September 12, 2019 Rating: 5