நாட்டின் அனைத்து தனியார் தொலைக்காட்சிகளும் , ஜனாதிபதியின் பாதுகாப்பமைச்சின் கீழ் வருகிறதா?


இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பமைச்சின் கீழ் கொண்டுவர 
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்திருப்பது குறித்து கவலை வெளியிட்டுள்ள ஊடக ஆர்வலர்கள் ,

இது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.


ஜனாதிபதித் தேர்தல் நடக்கவுள்ள சூழ்நிலையில் அரச பிரதான ஊடகத்தை ஜனாதிபதி எந்த அடிப்படையுமின்றி பாதுகாப்பமைச்சின் கீழ் கொண்டுவந்துள்ளமை குறித்து பிரதமரிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இதேவேளை நாட்டின் அனைத்து தனியார் தொலைக்காட்சிகளும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன சட்டமூலத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஜனாதிபதியின் இந்த தீர்மானத்திற்கமைய அவையும் பாதுகாப்பமைச்சின் கீழா வருகின்றனவென்று சட்ட நிபுணர்கள் பலர் பிரதமரிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.


ரூபவாஹினி பாதுகாப்பமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டதையடுத்து ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையிலான முறுகல் நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளதாக அறியமுடிகின்றது

நன்றி : தமிழன lk

நாட்டின் அனைத்து தனியார் தொலைக்காட்சிகளும் , ஜனாதிபதியின் பாதுகாப்பமைச்சின் கீழ் வருகிறதா? நாட்டின் அனைத்து தனியார் தொலைக்காட்சிகளும் , ஜனாதிபதியின் பாதுகாப்பமைச்சின் கீழ் வருகிறதா?   Reviewed by Madawala News on September 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.