VIDEO : முஸ்லீம் திருமணச்சட்ட விவகாரம் -முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையிட முடியாது.


-பாறுக் ஷிஹான் -FAROOK SIHAN-
 முஸ்லீம் திருமணச்சட்ட விவகாரத்தில் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையிட முடியாது
என்பதே எமது நிலைப்பாடாகும் என முபாற‌க் அப்துல் மஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார்.

முஸ்லீம் உலமா கட்சி ஞாயிற்றுக்கிழமை(4) மாலை நடாத்திய ஊடக சந்திப்பு ஒன்றில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

முஸ்லீம்கள் இந்த நாட்டில் உயிர் வாழக்கூடிய சந்தர்ப்பம் இல்லாத மாபெரும் பிரச்சினை இருந்து வருகின்றது.திருமண சட்டத்தை மாற்ற வேண்டும் என சில பெண்களும் படித்தவர்களும் முயன்று வருகின்றனர்.முஸ்லீம் திருமண சட்டத்தை மாற்றுவது தான் பிரச்சினையா? என்பதை கேட்க விரும்புகின்றேன்.இந்த நாட்டில் சுமார்  20 இலட்சம் முஸ்லீம்கள் வாழ்கின்றனர்.இதில் சிலரே திருமண சட்டத்தை மாற்ற முயற்சிக்கின்றனர்.ஆனால் இதுவரைக்கும் றூற்றாண்டு காலமாக  முஸ்லீம்கள் இச்சட்டத்தின் அடிப்படையிலே திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.இந்த முஸ்லீம்  திருமண சட்டத்தை மாற்ற ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.

நாம் முஸ்லீம் திருமண சட்டத்தை மாற்ற கூடாது அதில் கை வைக்க கூடாது   என்பதை நீண்ட காலமாக எமது கட்சியின் நிலைப்பாடாகவே  தெரிவித்து வருகின்றோம்.இச்சட்டத்தில் நாம் கை வைப்பதற்கு அனுமதிப்போம் ஆனால் அதை வலுவிழக்க செய்வதற்கு துணைபோவதற்கு ஆளாவோம்.1951 ஆண்டு இறுதியாக இச்சட்டம் இறுதியாக  திருத்தப்பட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் பின்னர் இச்சட்டத்தை திருத்த முற்பட்டால் பல்வேறு காரணங்களை முன்வைத்து இறுதியாக முஸ்லீம் திருமண சட்டம் தேவையா என கேட்பார்கள்.

இவையெல்லாம் இனவாதிகளின் நிகழ்ச்சி ஆகும்.இவ்வாறான இனவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு எந்த முஸ்லீமும் அடிபணிய வேண்டாம் என கூற விரும்புகின்றோம்.முஸ்லீம் திருமண சட்டத்தில் எவரும் குறிப்பான முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையிட கூடாது என்பதை தெரிவித்து கொள்ள விரும்புகின்றோம்.இந்த சட்டத்தில் ஏதாவது சேர்ப்பதென்றாலோ மாற்றம் செய்வதென்றாலோ உலமாக்களுக்கு மாத்திரமே உரிமை உண்டு.உலமா சபைக்கு உரிமை உண்டு.ஆனால் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் தலையிட கூடாது என்பது தான் எமது நிலைப்பாடாகும்.


எனவே தான் மேற்கூறிய பிரச்சினைகளுக்கு தீர்வை பெறுவதற்காக ஸ்ரீலங்கா  பொதுஜன  பெரமுன கட்சிக்கு எமது கட்சி ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளது.  எதிர்காலத்தில் இந்த நாட்டின் ஆட்சியை தீர்மானிக்க கூடிய மிகப்பெரும்  சக்தியாக ஸ்ரீலங்கா  பொதுஜன  பெரமுன கட்சி உள்ளதை நாம் மறந்துவிடக்கூடாது.அது மட்டுமல்ல சிங்கள மக்களில் பெரும்பாலானோர் இக்கட்சியுடன் இணைந்துள்ளனர்.

இதனால் முஸ்லீம் சமூகமாகிய நாம் பெரும்பான்மை 4மூகத்தோடு  இணக்க அரசியலை மேற்கொள்ள வேண்டும்.இதனால் தான் எமது கட்சியும் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு தெரிவித்து இணைந்துள்ளதை தெளிவாக தெரிவிக்க விரும்புகின்றோம்.இக்கட்சியுடன் இணைகின்ற போது பல கோரிக்கைகளை முன்வைத்தே இணைந்துள்ளோம்.அதில் முஸ்லீம்களின் பாதுகாப்பு கல்முனை பிரச்சினை மௌலவி ஆசிரியர் நியமனம்   முஸ்லீம் நாடுகளுக்கான தூதுவர்களை நியமிக்கின்ற போது பெரும்பாலாக முஸ்லீம்களை நியமித்தல் தேசிய மட்ட பிரச்சினைகளை முன்வைத்தே இணைந்துள்ளோம்.

இதனை அவர்கள் பெரும்பாலும் ஏற்றுள்ளனர்.இதனை எழுத்து மூலம் எழுதி கொடுத்துள்ளோம்.முஸ்லீம்கள் எதிர்கொள்ளும் இப்பிரச்சினைகளை அவர்கள் நிராகரிக்கவில்லை.அந்த அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை ஏற்படுத்தி இணைந்துள்ளோம்.இது ஏனைய கட்சிகளுக்கு எடுத்து காட்டு.அவர்களும் இவ்வாறு ஒப்பந்தங்களை மேற்கொண்டு இணைய வேண்டும் என்பதை கோரிக்கையாக முன்வைக்கின்றேன். என்றார்.
VIDEO : முஸ்லீம் திருமணச்சட்ட விவகாரம் -முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையிட முடியாது. VIDEO : முஸ்லீம் திருமணச்சட்ட விவகாரம் -முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையிட முடியாது. Reviewed by Madawala News on August 05, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.