வைத்தியசாலைக்கு மனைவியை கூட்டி செல்லாமல் வீட்டில் பிரசவம் பார்த்த தந்தை. குழந்தை உயிரிழப்பு. ரகசியமாக அடக்கம் செய்த இருவரும் கைது.


வைத்தியசாலைக்குச் செல்லாது வீட்டில் வைத்து பிரசவம் பார்த்த நிலையில் குழந்தை உயிரிழந்து பிறந்துள்ளதையடுத்து,
பிரதேசவாசிகளுக்குத் தெரியாது இரகசியமான முறையில் அடக்கம் செய்த குழந்தையின் தந்தையையும் தாயையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

 இச் சம்பவம் அநுராதபுரம் மாவட்டத்திற்குட் பட்ட கஹகடகஸ்திகிலிய,
மஹா கிரிப்பேவ கிரா மத்தில் கடந்த ஜூலை 28 ஆம் திகதி இடம்பெற்றுள் ளது. -


இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,


குறித்த தந்தையும் தாயும் தீவிர தப்லீக் ஜமாஅத் கொள்கையை பின்பற் றுபவர்களாவர்.

 அதிலும் நுஸ்ரான் பின்னூரி எனும் நபரால்   செய்யப் படும் பிரசாரமான,  வைத்தியசாலைக்ளுக்குச் சென்று சிகிச்சை பெறக் கூடாது எனும் நடை முறையை நீண்ட காலமாக பின்பற்றி வருபவர்களாவர்.

இக் குடும்பத்தினர் எந்தவொரு நோய்க்கும் வைத்தியசாலைக்கு சென்று மருந் தெடுப்பதில்லை என்றும் குறிப்பாக ஆண் வைத்தி யர்களை நாடுவதில்லை என்றும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.


இந்நிலையிலேயே 20 வயதேயான குறித்த யுவதி, கர்ப்பமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலை மூலமாக எந்தவித சிகிச்சை களையோ மருத்துவ பரிசோ தனைகளையோ பெறுவதை தவிர்த்து வந்துள்ளனர்.

இந்நிலையிலேயே கடந்த ஜூலை 28 ஆம் திகதி வீட்டில் குழந்தை பிறந்
துள்ளது. தாய்க்கு வயது 20 ஆகும். அத்துடன் இதுவே முதல் பிரசவமுமாகும். இப் பெண்ணின் கண வரின் மூத்த தாய் ஒருவரே வீட்டில் பிரசவத்துக்கு உத வியாக இருந்துள்ளார்.


இந் நிலையிலேயே குழந்தை உயிரிழந்து பிறந் துள்ளது. இந்நிலையில் குழந்தையை பிரதேச முஸ்லிம் மையவாடிக்குக் கொண்டு சென்று இரகசிய மான முறையில் குடும்பத்தினர் அடக்கம் செய்துள் எனர். இவ்வாறு குழந்தை பிறந்து மரணித்த விடயம் பிரதேசவாசிகளுக்குத் தெரி
விக்கப்படவில்லை .


இச் சம்பவம் நடந்து இரண்டு நாட்களின் பின்னர் வேறொரு ஜனாஸாவை அடக்கச் சென்றபோதே அங்கு புதிதாக ஜனாஸா ஒன்று அடக்கம் செய்யப்பட் டுள்ளதை பிரதேச மக்கள் கண்டுள்ளனர். பின்னர் இது குறித்து விசாரித்தபோதே இவ்வாறு வீட்டில் குழந்தை பிறந்து உயிரிழந்த விடயம் தெரிய வந்துள்ளது.


பின்னர் பிரதேச மக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கிய நிலையிலேயே குழந்தையின் தாயும் தந்தையும் கைது செய்யப்
பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


குழந்தை உயிரிழந்துதான் பிறந்ததா இன்றேல் உயிருடன் பிறந்து பின்னர் இறந்ததா என்பது தொடர்பில் பொலிசாரும் மருத்துவ அதிகாரிகளும் விசாரணைகளை முன்னெடுத்து .. வருகின்றனர்.

இது குறித்து ஆராயும் வகையில் அதிகாரிகளால் குழந்தையின் ஜனாஸா தேற்று முன்தினம் தோண்டியெடுத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி மூலம் : விடிவெள்ளி 9/8.2019
வைத்தியசாலைக்கு மனைவியை கூட்டி செல்லாமல் வீட்டில் பிரசவம் பார்த்த தந்தை. குழந்தை உயிரிழப்பு. ரகசியமாக அடக்கம் செய்த இருவரும் கைது. வைத்தியசாலைக்கு மனைவியை கூட்டி  செல்லாமல் வீட்டில் பிரசவம் பார்த்த தந்தை. குழந்தை உயிரிழப்பு. ரகசியமாக அடக்கம் செய்த இருவரும் கைது. Reviewed by Madawala News on August 09, 2019 Rating: 5