ஓட்டமாவடி ஸ்டைலிஷ் உரிமையாளர் ஏ.எல்.எம். ரிஸ்விக்கு இளம் தொழில் அதிபருக்கான விருது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

ஓட்டமாவடி ஸ்டைலிஷ் உரிமையாளர் ஏ.எல்.எம். ரிஸ்விக்கு இளம் தொழில் அதிபருக்கான விருது.


(எச்.எம்.எம்.பர்ஸான்)
மட்டக்களப்பு மாவட்டம், ஓட்டமாவடியைச் சேர்ந்த ஏ.எல்.எம்.ரிஸ்வி 
என்பவருக்கு இளம் தொழில் அதிபருக்கான விருது கிடைக்கப்பட்டுள்ளது. இந்த விருது அமெரிக்காவின் Business World international  அமைப்பினால் அண்மையில் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் பேராசிரியர் ஏ. டெஸ்டர் பெர்னான்டோ தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன் நாட்டின் முன்னணி தொழிலதிபர்களான தம்பிக பெரேரா, ஒடாரா குணவர்த்தன மற்றும் ஹிஸான் பாலேந்திரன் ஆகியோருக்கு i con of the Year விருதும் வழங்கப்பட்டது.

கல்குடாவின் முன்னணி ஆடை நிறுவனமான ஸ்டைலிஷ் கிழக்கு மாகாணத்தில் முதன்மையாகத் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆடையுலகில் புரட்சியினை ஏற்படுத்தி 15 வருட காலமாக கல்குடா மண்ணில் ஸ்டைலிஷ் நிறுவனத்தினை நடாத்தி வரும் ஸ்டைலிஷ் உரிமையாளர் ஏ.எல்.எம். ரிஸ்வி அவர்களுக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஓட்டமாவடி ஸ்டைலிஷ் உரிமையாளர் ஏ.எல்.எம். ரிஸ்விக்கு இளம் தொழில் அதிபருக்கான விருது.  ஓட்டமாவடி ஸ்டைலிஷ் உரிமையாளர் ஏ.எல்.எம். ரிஸ்விக்கு இளம் தொழில் அதிபருக்கான விருது. Reviewed by Madawala News on August 13, 2019 Rating: 5