மக்களுக்காக இந்த நிமிடம் உயிரை விடவும் தயாராக இருக்கிறேன்.




“ மக்களுக்காக இந்த நிமிடம் உயிரை விடவும் தயாராக இருக்கிறேன். எனது தந்தை போல நாட்டுக்காக நடுவீதியில் உயிரை தியாகம் செய்ய நான் தயார்…”

இவ்வாறு தெரிவித்தார் அமைச்சர் சஜித் பிரேமதாச

பதுளை வில்ஸ் பார்க் மைதானத்தில் இன்று நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் மேலும் கூறியதாவது ,


உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து நடுத்தர கைத்தொழிலாளர்களை ஊக்குவிக்கும்போது பொருளாதாரம் மேம்படும். இளைஞர்களை கொண்டு நாட்டை முன்னேற்ற வேண்டும். இளைஞர்களின் எண்ணங்களுக்கும் இலட்சியத்திற்கும் இடம் கொடுக்க வேண்டும். புதிய தொழிநுட்பத்துடன் நாங்கள் உலகை வெல்லவேண்டும்.



நாட்டை நிர்வகிக்கும்போது சரியான தேசிய கொள்கை வேண்டும். நாட்டை கைத்தொழில் யுகத்திற்கு கொண்டுசெல்லவேண்டும் . ஏற்றுமதி பொருளாதாரத்தை விருத்தி செய்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் .அதேபோல் கல்வி , சுகாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும்.



தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இராணுவ மட்டுமல்ல பொருளாதார , சமூக பாதுகாப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். பாதுகாப்பு – புலனாய்வுத்துறை மேம்படுத்தப்பட வேண்டும்.
மக்கள் மீதான வரிச்சுமை குறைக்கப்பட வேண்டும்.


தோட்டத் தொழிலாளரின் சம்பள பிரச்சினை குறித்து கவனிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


தீவிரவாதத்திற்கு இங்கு இடமில்லை. தீவிரவாதிகள் முற்றாக ஒழிக்கப்படுவர் . இவற்றை உருவாக்குபவர் யார் ? அவை எப்படி உருவாகின்றன என்பதை பார்க்க வேண்டும். நாட்டின் இறையாண்மையை நாங்கள் பாதுகாப்போம். நாட்டினை பிரிக்க எந்த சக்திக்கும் இடமளிக்க மாட்டோம். இன மத பேதமற்று செயற்பட்டு புதிய இலங்கையை உருவாக்குவோம்.


வெளிநாட்டு சக்திகளுடன் ஒப்பந்தம் செய்யும்போது நாட்டுக்கு பாதிப்பை ஏற்படும் எதிலும் கையொப்பமிடமாட்டோம்.


நாட்டை எப்படி நிர்வகிப்பது என்பதனை பத்து தர்மங்கள் அடிப்படையில் நாங்கள் மேற்கொள்வோம்.நாங்கள் பலவீனமானவர்கள் அல்ல. நான் பயந்தவன் அல்ல . மக்களுக்காக இந்த நிமிடம் மரணிக்கவும் நான் தயார். தந்தையின் வழியில் நான் நவம்பர் மாதம் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வேன். தந்தை போல நாட்டுக்காக நடுவீதியில் உயிரை தியாகம் செய்யவும் தயார். – என்றார் சஜித்

தமிழன lk
மக்களுக்காக இந்த நிமிடம் உயிரை விடவும் தயாராக இருக்கிறேன். மக்களுக்காக இந்த நிமிடம் உயிரை விடவும் தயாராக இருக்கிறேன். Reviewed by Madawala News on August 12, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.