ஜனாதிபதித் தேர்தலில் நானும் களமிறங்குவேன்..வெற்றிப்பெற்றால், புதிய அர​சமைப்பின் ஊடாக புதிய நிர்வாகத்தை அறிமுகப்படுத்துவேன்.


அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்கு தானும் தயாரெனத்
 தெரிவித்துள்ள
சிவில் ஏற்பாட்டாளரான சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு, அந்தத் தேர்தல் வெறும் தேர்தல் அல்ல. நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் முழு நாட்டின் முறைமையையும் மாற்றக்கூடிய தேர்தலாகும் என்றார்.


நாட்டின் தலை​விதியை தீர்மானிக்கும் ஜனாதிபதித் தேர்தல் என்பதனால், புதிய சிந்தனைகள், எண்ணங்கள் கருத்துகளுடன் இம்முறை தேர்தலில் களமிறங்குவேன் என்றும், அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு, இன்னும் 21 நாள்களில் விடுவேன் என்றார்.


பத்தரமுல்ல, தலவத்துகொடையில் ஊடகவியலாளர்களை அண்மையில் சந்தித்து, தான் போட்டிடுவதற்கான காரணத்தையும், எதிர்கால ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலும் தெளிவுப்படுத்திய அவர், சிறுபான்மையினர் என்றொரு பிரிவு இருக்கக்கூடாதெனவும், எனினும், அடுத்த தேர்தலில், இன,மத,மொழி வேறுபாடுகளை திணித்து வாக்குவேட்டையில் ஈடுபடுவதற்கு பெரும்பான்மையான பல கட்சிகள் முயற்சிக்கின்றது என்றார்.


நாட்டில் நிலையான சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்துவதற்கு தான், அர்ப்பணிப்பேன் எனத் தெரிவித்த அவர், அதற்காக அர்ப்பணிப்பேன் என்றார்.


தற்போதைய நாடாளுமன்றம் மோசடி செய்பவர்களின் மையமாக மாறியுள்ளதெனத் தெரிவித்துள்ள அவர், ஆகையால், தற்போதிருக்கும் இந்த முறைமையில் உடனடியாக மாற்றங்களை ஏற்படுத்தவேண்டுமென்றார்.


உலகில், நாடுகள் பல, ஸ்ரீ லங்காவை பின்னோக்கி தள்ளிவிட்டு முன்னோக்கிச் சென்றுவிட்டது. ஸ்ரீ லங்கா, இன்னுமின்னும் பின்னோக்கி சென்றுகொண்டிருக்கும் நாடு என்பதற்கு, நாட்டுக்குள் சட்ட ஆட்சி இல்லையென்பதை எடுத்து​காட்டுகிறது எனத்தெரிவித்த அவர், இந்த முறைமையை மாற்றவில்லையெனில், முன்னோக்கிய பயணமில்லை என்றார்.


“அதேபோல, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப்பெற்றால், புதிய அர​சமைப்பின் ஊடாக புதிய நிர்வாகத்தை அறிமுகப்படுத்துவேன். அந்த வேலைத்திட்டங்களை, நாட்டின் முன்னிலையில் விரைவில் முன்வைப்பேன்” என்றார்.
ஜனாதிபதித் தேர்தலில் நானும் களமிறங்குவேன்..வெற்றிப்பெற்றால், புதிய அர​சமைப்பின் ஊடாக புதிய நிர்வாகத்தை அறிமுகப்படுத்துவேன்.  ஜனாதிபதித் தேர்தலில் நானும் களமிறங்குவேன்..வெற்றிப்பெற்றால், புதிய அர​சமைப்பின் ஊடாக புதிய நிர்வாகத்தை அறிமுகப்படுத்துவேன்.  Reviewed by Madawala News on August 16, 2019 Rating: 5