மக்கள் அச்சமோ பயமோ இல்லாமல் வாக்களிக்க முடியுமான ஒருவராக எமது ஜனாதிபதி வேட்பாளர் இருப்பார்.


மக்கள் அச்சமோ பயமோ இல்லாமல் வாக்களிக்க முடியுமான ஒருவரையும், வாக்களித்த பின்னர் மக்கள்
தமது வாக்குகளுக்காக வருத்தப்படத் தேவையில்லாத ஒருவரையும் மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

இன்று (16) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

நாங்கள் தேசிய மக்கள் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். வழக்கம் போல், ராஜபக்ஷ முகாம் அதற்கு எதிராக இருந்த பல்வேறு குழுக்களை மீட்டெடுக்க முயற்சிக்கிறது.

இந்தத் தேர்தல் நம் நாட்டின் அரசியலில் ஒரு திருப்புமுனையாக இருக்கும். இது நம் நாட்டிற்கு ஒரு புதிய பயணத்தை உருவாக்கும் நாளாக இருக்கும். நாட்டைப் பாதுகாக்கும் சக்தியுடன் கைகோர்க்குமாறு மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

முற்போக்கான பேச்சுகளால் உந்தப்பட்டு ஏமாந்து விட வேண்டாம் என பொது மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

ஆரம்ப காலத்தில் இராஜாக்களை வணங்கிக் கொண்டிருந்த குடிமக்களைப் போல்  இருக்க சிலர் விரும்புகிறார்கள். இதில், ஜனநாயகத்தை ஊக்குவிக்கும் மக்களும் இவ்வாறு செயற்பட முற்படுவது  கவலையானது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். D C
மக்கள் அச்சமோ பயமோ இல்லாமல் வாக்களிக்க முடியுமான ஒருவராக எமது ஜனாதிபதி வேட்பாளர் இருப்பார். மக்கள் அச்சமோ பயமோ இல்லாமல் வாக்களிக்க முடியுமான ஒருவராக எமது ஜனாதிபதி வேட்பாளர்  இருப்பார். Reviewed by Madawala News on August 16, 2019 Rating: 5