கொழும்பு குப்பைகளைக் கொண்டு சென்ற டிப்பர் மீதும், பாதுகாப்புக்கு சென்ற போலீஸ் ஜீப் மீதும் தாக்குதல்.



புத்தளம், அருவக்காட்டுக்கு கொழும்பு குப்பைகளைக் கொண்டு சென்ற டிப்பர்
 வாகனம்  மீதும், அதற்கு பாதிகாப்பாகச் சென்ற பொலிஸ் ஜீப் மீதும் நேற்று (24) காலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் தில்லையடிப் பகுதியில் மறைந்திருந்த சிலர் இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த தாக்குதலில் குப்பைகளை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும், புத்தளம் பொலிஸ் தலைமையகத்திற்கு சொந்தமான எல்.டி - 6907 எனும் இலக்கமுடைய பொலிஸ் ஜீப் வண்டியும் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.


குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பெயரில் ஒருவர் புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சனிக்கிழமை (24) புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் பாரிஸ் மரிக்கார் முன்னலையில் ஆஜர்படுத்திய போது , சந்தேகநபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிடப்பட்டுள்ளார்.


கொழும்பு குப்பைகளைக் கொண்டு சென்ற டிப்பர்கள் மீது மூன்றாவது தடவையாக தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

( ரஸ்மின் :புத்தளம் )
கொழும்பு குப்பைகளைக் கொண்டு சென்ற டிப்பர் மீதும், பாதுகாப்புக்கு சென்ற போலீஸ் ஜீப் மீதும் தாக்குதல். கொழும்பு குப்பைகளைக் கொண்டு சென்ற டிப்பர் மீதும், பாதுகாப்புக்கு சென்ற போலீஸ் ஜீப் மீதும் தாக்குதல். Reviewed by Madawala News on August 25, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.