முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் தொடர்பில் 2150 முறைப்பாடுகள்!



முஸ்லிம் பெண்களின் ஆடை கலாசாரத்தை தடை ஏற்படுத்துவது அடிப்படை உரிமை மீறலாகும்
எனக் கூறி மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழு காரியாலயத்துக்கு பெண்கள் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலமும் மற்றும் தனித் தனியாகவும் சுமார் 2,150 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

முஸ்லிம் பெண்களின் ஆடைக் கலாசாரத்தில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது எனவும் நிகாப் மற்றும் புர்கா போன்ற முஸ்லிம் பெண்களின் சுதந்திரமான ஆடைக் கலாசாரத்தை தடை செய்ய எடுக்கும் நடடிவக்கையை சட்டமாக்கக் கூடாது என தெரிவித்து காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பெண்கள் மட்டக்களப்பு மனித உரிமை அலவலகத்தில் முறைப்பாடுகளை செய்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் தொடர்பில் 2150 முறைப்பாடுகள்! முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் தொடர்பில் 2150 முறைப்பாடுகள்! Reviewed by Madawala News on August 21, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.